Connect with us

கலாசாரம்

காதலில் விழுந்து விட்டீர்களா? – இந்த தவறுகளை மட்டும் செய்யாதீங்க!!

Published

on

young woman hugging partner from behind 768

பலரும் திரைப்படங்களை பார்த்து ஓஹோ இதுதான் காதலா என்று ஏமாந்து போயிருக்கிறார்கள். காவியமோ, கதையோ அவற்றில் பாதி புனைவு என்பதை யாரும் புரிந்துகொள்வதில்லை.

எல்லா இடத்திலும் மாறாமல் சொல்லப்படுவது காதலுக்காக விட்டுக்கொடுங்கள், தியாகம் செய்யுங்கள் , சமரசம் செய்துக் கொள்ளுங்கள் என்பதே. ஆனால் , உண்மையில் தியாகமும் சமரசமும் காதலை உருவாக்காது. அப்படி நாம் காதல் என்று நம்பி நம்மை நாமே ஏமாற்றிக் கொண்டிருக்கும் 5 தவறான புரிதல்களை சரியாக புரிந்து கொள்வோம்.

1. கெமிஸ்ட்ரி ஒர்க்அவுட் ஆகல

உங்களுக்கு ஒருவரை பிடித்திருக்கலாம். அவருக்கும் உங்களை பிடித்திருக்கலாம். இருவரும் பரஸ்பர புரிதலோடு காதல் செய்யலாம். இருப்பினும் இருவருக்குள்ளும் எப்போதும் போர் மூட்டமாக இருக்கிறது.

அப்படியென்றால் உங்களுக்குள் படங்களின் பாணியில் சொல்வதென்றால் கெமிஸ்ட்ரி வேலை செய்யவில்லை என்று அர்த்தம். அது உங்கள் உறவை அடுத்தக் கட்டத்திற்கு எடுத்துச் செல்ல விடாமல் தடுத்து விடும்.

2. நிஜமான முகம்

ஒரு காதல் அமையும் வரை பின்னாடியே சுற்றித் திரிந்து கெஞ்சி கூத்தாடி காதலை ஓகே செய்வது. அதுவே பிரச்சினைக்குரிய விஷயம்தான். இதில் காதல் அமைந்தவுடன்தான் உண்மையான முகத்தை காட்ட ஆரம்பிப்பது. தன்னுடைய லவ்வர் தன்னை விட்டு எங்க போகப்போறாங்க என்ற நினைப்பு வந்து விடுகிறது.

வல்வவன் பட சிம்புக்கு ரீமாசென் கொடுக்கும் தொல்லை போல கொடுக்க துவங்குவது. பிறகு, லவ்வர் எதிர்த்து கேள்வி கேட்க ஆரம்பித்தால் நான் உன்னை எவ்வளவு காதல் செய்கிறேன் தெரியுமா அன்பு இருக்கும் இடத்தில்தான் கோபம் இருக்கும் என்று உருட்டுவது. இது உங்களின் மீதும் உங்களின் டாக்ஸிக் காதலின் மீதும் வெறுப்பை விதைக்குமே தவிர காதலை அதிகப்படுத்தாது. எனவே , அந்தக் காதல் நீண்ட காலம் நீடிக்காது. அப்படியும் சிலர் சகித்துக் கொண்டு காலத்தை ஓட்டுவதுண்டு..

3. இரட்சகர் மனநிலை

வாழ்க்கையில் பல தடைக்கற்கள் இருக்கும். அவற்றை தாண்டி சாதிக்க வேண்டும் என்ற மோட்டிவேஷன் வசனமெல்லாம் உண்மைதான். ஆனால், அது பரஸ்பர புரிதலோடு அமைய வேண்டும். ஒருவரின் தவறான அனுகுமுறையை பொறுத்துக் கொண்டு, அவர் திருந்தி விடுவார், மாறி விடுவார் என்று தன்னுடைய வாழ்க்கையை அர்பணிப்பது தவறான செயல்.

உங்கள் காதலை சரியாக்குவதற்காக அல்லது சரியான வாழ்வை முன்னெடுப்பதற்காக சில முயற்சிகளை செய்யலாம். ஆனால், அந்த முயற்சியில் உங்களின் சுயவாழ்வை இழக்கும்படி அமையும் போது நீங்கள் சிந்தித்து வெளியேறி விட வேண்டும். அதைவிட்டு உங்களை நீங்களே இரட்சகரை‌ போல் நினைத்துக் கொண்டு காப்பாற்றும் படலத்தில் இறங்கினால் இறுதியில் வெறுமையும் விரக்தியும் மட்டுமே மிஞ்சும்.

4. தப்புனா தப்புதான்

ஒரு காதல் கிடைத்துவிட்டது. இதுதான் நமது கடைசி. இனி வாழ்க்கையில் செட்டில் ஆகி விடுவோம் என்று மட்டும் முடிவு செய்து கொள்ளாதீர்கள். பின் ஏமாற்றம் உங்களை தின்றுவிடும். ஒரு காதல் என்றால் இன்பம் துன்பம் ஏமாற்றம் வெறுப்பு பிரிவு தனிமை என பல இருக்கும். அது பல நேரங்களில் காதல் முறிவையும் கூட ஏற்படுத்தலாம்.

அந்த கட்டம் உங்களுக்கு கடுமையானதாக இருக்கலாம். நீண்டகால உறவு என்று நினைத்த ஒரு விஷயத்தை எப்படி விடுவது என்று அதிலேயே மூழ்கி விடாதீர்கள். முதல் கோணல் முற்றிலும் கோணல் என்பது போல் ஒரு முறை உடைவதற்கான காரணம் தோன்றிவிட்டால் அது மீண்டும் மீண்டும் ஏதாவது ஒரு வகையில் ஏற்பட்டுக் கொண்டே இருக்கும். அது முழுமையாக இருவரையும் விழுங்குவதற்கு முன் புரிந்துக் கொண்டு விலகி விடுங்கள்.

5. அவசரப்படாதீங்க

உங்கள் காதலை பொறுமையாக தேர்ந்தெடுங்கள். தேடலை மேற்கொள்ளுங்கள். ஐய்யய்யோ இந்த வாய்ப்ப விட்டா நமக்கு காதலே அமையாது என்றெல்லாம் நினைக்காதீர்கள். காதல் என்பது வாய்ப்பு சார்ந்தது அல்ல. வாழ்க்கை சார்ந்தது. சந்தர்ப்பாவாதியாக நீங்கள் காதலை முடிவு செய்யும்போது அது உங்கள் வாழ்க்கையில் மோசமான அனுபவத்தை ஏற்படுத்தலாம். அது வாழ்வின் பெரும் தவறாக அமையலாம்.

எனவே, நிறுத்தி நிதானமாக உங்களுக்கான காதல் அமையும் வரை காத்திருங்கள். 90ஸ் கிட்ஸ் போல கல்யாணமே நடக்கல பாஸ்னு புலம்பாதீர்கள். உங்கள் வாழ்க்கையில் நீங்கள் எத்தனையோ லட்சம் பேரை பார்க்கலாம். அவர்களில் உங்களுக்கானவர்களும் இருக்கலாம். அந்த லட்சத்திலும் இல்லையென்றால் லட்சத்தில் முதலாவது ஆள் உங்களுக்கானவராக இருக்கலாம். பொறுமையே பெருமை.

#LifeStyle

Click to comment

You must be logged in to post a comment Login

Leave a Reply

Advertisement

ஜோதிடம்

tamilnaadi 1 tamilnaadi 1
ஜோதிடம்33 minutes ago

இன்றைய ராசி பலன் : 3 ஜனவரி 2025 – Daily Horoscope

இன்றைய ராசிபலன் 3.01. 2025, குரோதி வருடம் மார்கழி 19 வெள்ளிக் கிழமை, சந்திரன் மகரம் ராசியில் சஞ்சரிக்கிறார். மிதுனம் ராசியில் திருவாதிரை, புனர்பூசம் நட்சத்திரத்தை சேர்ந்தவர்களுக்கு...

tamilnaadi tamilnaadi
ஜோதிடம்2 நாட்கள் ago

இன்றைய ராசி பலன் : 1 ஜனவரி 2025 – Daily Horoscope

இன்றைய ராசி பலன் : 1 ஜனவரி 2025 – Daily Horoscope Happy New Year: இன்றைய ராசிபலன் 1.01.2025, குரோதி வருடம் மார்கழி 17,...

tamilnaadi 5 tamilnaadi 5
ஜோதிடம்5 நாட்கள் ago

இன்றைய ராசி பலன் : 29 டிசம்பர் 2024 – Daily Horoscope

இன்றைய ராசி பலன் : 29 டிசம்பர் 2024 – Daily Horoscope இன்றைய ராசிபலன் 29.12.2024 குரோதி வருடம் மார்கழி 14, ஞாயிற்று கிழமை, சந்திரன்...

tamilnaadi 5 tamilnaadi 5
ஜோதிடம்1 வாரம் ago

இன்றைய ராசி பலன் : 26 டிசம்பர் 2024 – Daily Horoscope

இன்றைய ராசி பலன் : 26 டிசம்பர் 2024 – Daily Horoscope இன்றைய ராசிபலன் 26.12.2024, குரோதி வருடம் மார்கழி 11, வியாழக் கிழமை, சந்திரன்...

tamilnaadi 5 tamilnaadi 5
ஜோதிடம்1 வாரம் ago

இன்றைய ராசி பலன் : 25 டிசம்பர் 2024 – Daily Horoscope- Happy Christmas

இன்றைய ராசி பலன் : 25 டிசம்பர் 2024 – Daily Horoscope- Happy Christma இன்றைய ராசிபலன் 25.12.2024, குரோதி வருடம் மார்கழி 10, புதன்...

tamilnaadi 4 tamilnaadi 4
ஜோதிடம்1 வாரம் ago

இன்றைய ராசி பலன் : 24 டிசம்பர் 2024 – Daily Horoscope

இன்றைய ராசி பலன் : 24 டிசம்பர் 2024 – Daily Horoscope இன்றைய ராசிபலன் 24.12.2024, குரோதி வருடம் மார்கழி 9, செவ்வாய்க் கிழமை, சந்திரன்...

tamilnaadi 4 tamilnaadi 4
ஜோதிடம்2 வாரங்கள் ago

இன்றைய ராசி பலன் : 22 டிசம்பர் 2024 – Daily Horoscope

இன்றைய ராசி பலன் : 22 டிசம்பர் 2024 – Daily Horoscope இன்றைய ராசிபலன் 22.12.2024, குரோதி வருடம் மார்கழி 7 ஞாயிற்று கிழமை, சந்திரன்...