rtjy 186 scaled
உலகம்செய்திகள்

இஸ்ரேலின் தாக்குதலை கண்டித்த புடின்

Share

இஸ்ரேலின் தாக்குதலை கண்டித்த புடின்

கிழக்கு ஜெருசலேமை தலைநகராகக் கொண்ட ஒரு சுதந்திர பாலஸ்தீன நாட்டை உருவாக்க வேண்டும் என ரஷ்ய ஜனாதிபதி புடின் தெரிவித்துள்ளார்.

மேலும், அதைத் தவிர அமைதியை ஏற்படுத்த வேறு வழியில்லை எனவும் கூறியுள்ளார்.

இதற்கமைய, இஸ்ரேலின் இந்த தாக்குதலை ஏற்றுக்கொள்ளவே முடியது என்றும், இந்த தாக்குதல் லெனின்கிராட் மீதான நாஜி படை தாக்குதலுக்கு நிகரானது என்றும் சர்வதேச ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய நேர்காணலில் தெரிவித்துள்ளார்.

ஹமாஸ் அமைப்பினர் இடையே 8 நாட்களாகப் போர் நடைபெற்று வரும் நிலையில், நிலைமை நாளுக்கு நாள் தீவிரமடைந்து வருகிறது.

காசாவிற்கு கொடுக்கும் பதிலடி ஹமாஸ் அமைப்பிற்கு மட்டுமல்ல, நமது எதிரிகள் கூட மறக்க முடியாத நினைவாக இருக்க வேண்டும் என்று இஸ்ரேல் தெரிவித்து அதிதீவிரமான தாக்குதலை நடத்தி வருகிறது.

இந்த தாக்குதலில் ஹமாஸ் அமைப்பினரை விட ஆயிரக்கணக்கான பாலஸ்தீன மக்கள் கொள்ளப்படுவதாக ஐ.நா கவலை தெரிவித்துள்ளது.

இதனிடையே காசாவை சுற்றி வளைத்துள்ள இஸ்ரேல் அங்கு மின்சாரம், உணவு குடிநீர் உள்ளிட்டவற்றைத் துண்டித்துள்ளது.

ஹமாஸ் அமைப்பினர் பிடித்து வைத்திருக்கும் இஸ்ரேலிய பிணைக்கைதிகளை விடுவிக்கும் வரை காசாவிற்கு மின்சாரம் கிடையாது என இஸ்ரேல் எச்சரித்துள்ளது.

இருப்பினும் தொடர்ந்து தனது பீரங்கி குண்டுகளால் காசா நகர் மீது இஸ்ரேல் அதி தீவிர தாக்குதலை நடத்தி வருகிறது.

ஹமாஸ் அமைப்பில் கடைசியாக இருக்கும் ஒவ்வொருவரையும் வேட்டையாடுவோம் என்று தெரிவித்துள்ள இஸ்ரேல், தற்போது தரைவழி தாக்குதலை ஆரம்பித்துள்ளது.

நேற்று வரை ஹமாஸ் அமைப்பினர் இருக்கும் காசா நகர கட்டிடங்கள் மீது பீரங்கி குண்டுகளால் வான்வழி தாக்குதல் நடத்தி வந்த இஸ்ரேல், தற்போது தரை வழி தாக்குதலை நடத்தி வருவதாக கூறப்படுகிறது.

இதற்காக காசாவை சுற்றி சுமார் 3 இலட்சம் இஸ்ரேல் இராணுவ வீரர்கள் நிறுத்தப்பட்டு தாக்குதல் நடைபெற்று வருகிறது.

காசா நகரத்தின் பல்வேறு பகுதிகளுக்குள்ளும் புகுந்து இஸ்ரேல் இராணுவம் தாக்குதல் நடத்திவருகிறது.

இதுவரை உயிரிழந்த பாலஸ்தீன மக்களின் எண்ணிக்கை 2000 தாண்டிய நிலையில், இஸ்ரேலின் தரை வழி தாக்குதலால் பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்கக்கூடும் என மனித உரிமை ஆர்வலர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.

Share
தொடர்புடையது
32 4
இலங்கைசெய்திகள்

எந்தவொரு அரசியல் கட்சியுடனும் கூட்டணி சேரப் போவதில்லை – சாகர

எந்தவொரு அரசியல் கட்சியுடனும் கூட்டணி சேரப் போவதில்லை என ஶ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் பொதுச் செயலாளர்...

31 4
இலங்கைசெய்திகள்

மிரட்டுகின்றார் அநுர! சுமந்திரன் பகிரங்க குற்றச்சாட்டு

தங்களிடம் மூன்றிலிரண்டு பெரும்பான்மைப் பலம் உள்ளது என்றும், தன்னிடம் நிறைவேற்று அதிகாரம் உள்ளது என்றும் ஜனாதிபதி...

30 5
இலங்கைசெய்திகள்

நீரில் மூழ்கிய நயினாதீவு படகுப் பாதை

நயினாதீவு – குறிகட்டுவான் இடையே சேவையில் ஈடுபட்ட நிலையில் நீண்ட காலமாக பழுதடைந்து சேவையில் ஈடுபட...

28 7
இலங்கைசெய்திகள்

இலங்கையும் இந்தியாவும் செய்து கொண்ட முக்கிய உடன்படிக்கை

இலங்கையின் வெளிநாட்டு கடன் மறுசீரமைப்பு செயல்முறையின் கீழ், கடன் வரி மற்றும் கொள்வனவாளர் கடன் ஒப்பந்தங்கள்...