இலங்கை
கைதிகளை அச்சுறுத்த எனக்கு பைத்தியமில்லை -லொஹான் பல்டி
அநுராதபுரம் சிறைச்சாலையில் உள்ள தமிழ் அரசியல் கைதிகளை துப்பாக்கி முனையில் மிரட்டினேன் என முன்வைக்கப்படும் குற்றச்சாட்டுக்களை அடியோடு மறுக்கிறேன் என சிறைச்சாலை மறுசீரமைப்பு முன்னாள் இராஜாங்க அமைச்சர் லொஹான் ரத்வத்த தெரிவித்துள்ளார்.
சிறைகளில் நடைபெறுகின்ற குற்றங்களை நான் தடுப்பதனால் இது போன்ற குற்றச்சாட்டுக்களை என்மீது சுமத்துகின்றனர்.
எனினும் நான் ஜனாதிபதி மற்றும் பிரதமர் ஆகியோருக்கு நேரில் சென்று எனது விளக்கத்தை அளிக்கவுள்ளேன்.
அந்த சிறையில் உள்ள கைதிகளை அச்சுறுத்தவில்லை. அங்கு கண்காணிப்பு விஜயத்தையே மேற்கொண்டிருந்தேன் என தெரிவித்துள்ளார்.
அமைச்சர் என்ற அடிப்படையில் என்னால் எவ்வேளையிலும் சிறைகளுக்கு கண்காணிப்பு விஜயத்தை மேற்கொள்ள முடியும். அதற்கு எவருடைய அனுமதியும் எனக்குத் தேவையில்லை. எனது பொறுப்பில் 29 சிறைச்சாலைகளும் இரண்டு மறுவாழ்வு நிலையங்களும் உள்ளன. நான் இரவு பகல் என எந்தச் சந்தர்ப்பத்திலும் அங்கு சென்று நிலைமைகளை கண்காணிக்க முடியும்.
சிறைகளுள் என்ன நடைபெறுகின்றன என்பதை கண்காணிக்க திடீரென விஜயம் செல்வேன்.
அத்துடன் எந்தக் கைதிகளையும் துப்பாக்கி முனையில் அச்சுறுத்தி மண்டியிட வைத்து கொலை அச்சுறுத்தல் விடுக்கவில்லை. அவ்வாறு செய்ய எனக்கு பைத்தியமில்லை.
நான் ஒரு பெண்ணுடன் வெலிக்கட சிறைக்கு சென்றேன் எனக் கூறப்படும் கதைகள் போலியானவை. இதனை ஜனாதிபதி மற்றும் பிரதமரிடம் தெளிவுபடுத்துவேன்’’ என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
You must be logged in to post a comment Login