tamilni 112 scaled
இலங்கைசெய்திகள்

காலநிலை தொடர்பான அறிவிப்பு

Share

காலநிலை தொடர்பான அறிவிப்பு

காலநிலையில் இன்று ஏற்படும் மாற்றம் குறித்து மக்களுக்கு முன்னறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளது.

இதற்கமைய நாட்டின் பெரும்பாலான பிரதேசங்களில் மாலையில் அல்லது இரவில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது என வளிமண்டளவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

ஊவா, மத்திய, சப்ரகமுவ மற்றும் கிழக்கு மாகாணங்களில் சில இடங்களில் 75 மி.மீ க்கும் அதிகமான ஓரளவு பலத்த மழைவீழ்ச்சி எதிர்பார்க்கப்படுகின்றது.

மேல் மற்றும் தென் மாகாணங்களின் கரையோர பிரதேசங்களில் காலை வேளையில் மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

நாட்டைச் சூழவுள்ள கடற்பரப்புகளில் காற்றானது தெற்கு முதல் தென்மேற்கு வரையான திசைகளிலிருந்து வீசக் கூடுவதுடன் காற்றின் வேகமானது மணித்தியாலத்துக்கு 20 – 30 கிலோ மீற்றர் வரை காணப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

புத்தளத்திலிருந்து மன்னார் ஊடாக காங்கேசந்துறை வரையான கரையோரத்திற்கு அப்பாற்பட்ட காற்றின் வேகமானது அவ்வப்போது மணித்தியாலத்துக்கு 40 கிலோ மீற்றர் வரை அதிகரிக்கக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.

மேலும் இடியுடன் கூடிய மழை பெய்யும் வேளைகளில் அப்பிரதேசங்களில் தற்காலிகமாக பலத்த காற்றும் வீசக்கூடும் எனவும் மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளை குறைத்துக்கொள்ள தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துக்கொள்ளுமாறு பொதுமக்கள் அறிவுறுத்தப்படுகின்றார்கள்.

Share
தொடர்புடையது
விக்ரம் மிஸ்ரி
இலங்கை

இலங்கைக்கு சென்ற இந்திய வெளியுறவுச் செயலாளர்!

இன்றைய தினம், இந்திய வெளியுறவுச் செயலாளர் விக்ரம் மிஸ்ரி ஒரு நாள் உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டு...

exam hall
இலங்கை

தொடரும் காலநிலை சீர்கேடுகள் – திட்டமிடப்பட்ட பரீட்சைகள் தொடர்பில் இடம்பெற்றுள்ள கலந்துரையாடல்.

தொடரும் சீரற்ற வானிலையை கருத்திற் கொண்டு, எதிர்வரும் நாட்களில் நடைபெறவுள்ள 5ஆம் தரப் புலமைப்பரிசில் பரீட்சை...

அகில விராஜ் காரியவசம் 1
இலங்கை

முன்னாள் அமைச்சர் அகில விராஜ் காரியவசம் கைது!

முன்னாள் அமைச்சர் அகில விராஜ் காரியவசம், வாக்குமூலம் ஒன்றை வழங்குவதற்காக இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவில் இன்றைய...

சீரற்ற காலநிலை
இலங்கை

காலநிலை தாக்கத்தினால் ஏற்பட்ட உயிரிழப்புகள் அதிகரிப்பு – துரித கதியில் இடம்பெறும் சீரமைப்பு பணிகள்.

தற்போது நிலவும் மழையுடனான சீரற்ற காலநிலையால் ஏற்பட்ட அனர்த்தங்களினால் 8 பேர் உயிரிழந்துள்ளதுடன், 3 ஆயிரத்து...