செய்திகள்
வைத்தியசாலையில் வைத்த கைக்குண்டு அமைச்சர் வீட்டிலிருந்து எடுக்கப்பட்டது! – சந்தேகநபர் தெரிவிப்பு
வைத்தியசாலையில் வைத்த கைக்குண்டு அமைச்சர் வீட்டிலிருந்து எடுக்கப்பட்டது! – சந்தேகநபர் தெரிவிப்பு
நாரஹேன்பிட்டிய தனியார் வைத்தியசாலையில் எடுக்கப்பட்ட கைக்குண்டு, அமைச்சர் வீட்டிலிருந்து எடுக்கப்பட்டுள்ளது என அறியப்பட்டுள்ளது
கொழும்பில் விஜேராம மாவத்தையில் அமைந்துள்ள உள்ள அமைச்சரின் உத்தியோகபூர்வ வாசஸ்தலத்தின் இலாச்சியில் இருந்தே இந்த கைக்குண்டு எடுக்கப்பட்டுள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது
கைக்குண்டு மீட்கப்பட்டது தொடர்பில் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்ட காவலில் வைக்கப்பட்டுள்ள திருகோணமலை உப்புவேலி பிரதேசத்தை சேர்ந்த சந்தேகநபர்களால் வழங்கப்பட்ட வாக்குமூலத்திலே இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
கட்டட நிர்மாணப் பணியாற்றும் சந்தேகநபர், மூன்று மாதங்களுக்கு முன்னர், திருத்தப்பணிகளுக்காக அமைச்சரின் உத்தியோகபூர்வ வாசஸ்தலத்துக்கு சென்ற வேளையில் அங்கிருந்த மேசை இலாச்சியிலிருந்து கைக்குண்டு மற்றும் தோட்டாக்கள் சிலவற்றை எடுத்துள்ளார்.
கைக்குண்டை இவர் வைத்துக்கொண்டதோடு தோட்டாக்களை அவருடன் இருந்த மற்றுமொருவர் எடுத்துள்ளார்.
தோட்டக்களை எடுத்தவர் வசிக்கும் மஹவ மற்றும் வெலிக்கந்த பிரதேசங்களுக்கு விசேட விசாரணைப்பிரிவினர் நேற்று (16) சென்று அங்கு சோதனை நடத்தியுள்ளனர்.
கைக்குண்டு மற்றும் தோட்டாக்கள் மீட்கப்பட்ட வீட்டிலே தற்போது அமைச்சர் தற்போது வசித்துவருகின்றார். எனினும், அமைச்சர் அந்த உத்தியோகபூர்வ வாசஸ்தலத்துக்கு தருவதற்கு முன்னரே தான் கைக்குண்டு மற்றும் தோட்டக்களை எடுத்துள்ளார் என சந்தேகநபர் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பான விசாரணைகள் நடைபெற்று வருகின்றன என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
You must be logged in to post a comment Login