rtjy 39 scaled
இலங்கைசெய்திகள்

பொலிஸ் உத்தியோகத்தர் மீது கூரிய ஆயுதத்தால் தாக்குதல்

Share

பாணந்துறை – அலோபோமுல்ல பிரதேசத்தில் மதுபோதையில் முச்சக்கரவண்டியை செலுத்திய சாரதி ஒருவரை கைது செய்ய சென்ற பொலிஸ் கான்ஸ்டபள் மீது கூரிய ஆயுதத்தால் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இந்நிலையில், முச்சக்கரவண்டியின் உரிமையாளரால் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டதில் பொலிஸ் கான்ஸ்டபள் காயமடைந்து பாணந்துறை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

முச்சக்கரவண்டி சாரதி மதுபோதையில் அதிவேகமாக வாகனத்தை செலுத்திய போது அலோபோமுல்ல பொலிஸ் போக்குவரத்து பிரிவின் கான்ஸ்டபிள் ஒருவர் வாகனத்தை நிறுத்தி சாரதியிடம் விசாரணை நடத்தியுள்ளார்.

அப்போது சம்பவ இடத்திற்கு வருகைதந்த முச்சக்கரவண்டியின் உரிமையாளர் பொலிஸ் உத்தியோகத்தரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டதோடு ஆயுதத்தால் தாக்கியுள்ளார்.

இதன்போது கான்ஸ்டபிளை தாக்கிவிட்டு தப்பியோடிய சந்தேக நபரை கைது செய்த பொலிஸார் அவரை நேற்றையதினம்(04.10.2023) நீதிமன்றில் முன்னிலைப்படுத்தியதாக தெரிவிக்கப்படுகிறது.

Share
தொடர்புடையது
world 231
செய்திகள்உலகம்

ஹோர்முஸ் நீரிணையை இனி மூடப்போவதில்லை: ஈரானின் உறுதிமொழியை அறிவித்தார் டொனால்ட் டிரம்ப்!

சர்வதேச எரிசக்தி விநியோகத்தின் உயிர்நாடியாக விளங்கும் ஹோர்முஸ் நீரிணையை (Strait of Hormuz) இனிவரும் காலங்களில்...

world 230
செய்திகள்இலங்கைபிராந்தியம்

நாய்கள் அச்சப்படுவதாகக் கூறி பட்டாசு கொளுத்த வேண்டாமெனக் கேட்ட பெண் மீது தாக்குதல்: ஒருவர் கைது!

மொரகஹஹேன பகுதியில் பட்டாசு கொளுத்துவதை நிறுத்துமாறு கோரிய பெண் ஒருவர் மீது, அவரது அண்டை வீட்டார்...

world 229
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பெட்ரோல் வாகனங்களுக்கு மீண்டும் QR முறை: தற்காலிக சலுகை இன்று நள்ளிரவுடன் நிறைவு!

சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு பண்டிகைக் காலத்தை முன்னிட்டு பெட்ரோல் வாகனங்களுக்கு வழங்கப்பட்டிருந்த தற்காலிக கியூ.ஆர்...

world 228
செய்திகள்உலகம்

ரஷ்ய எண்ணெய் மீதான தடை விலக்கை மேலும் ஒரு மாதம் நீடித்தது அமெரிக்கா!

சர்வதேச எரிசக்தி சந்தையில் நிலவும் கடும் விலை ஏற்றம் மற்றும் விநியோகத் தட்டுப்பாடுகளைக் கருத்திற்கொண்டு, ரஷ்யாவின்...