tamilni 3 scaled
இலங்கைசெய்திகள்

தமிழ் மக்களுக்கு குறி வைக்கும் சிங்கள கடும்போக்காளர்கள்! தீ வைக்கும் முயற்சி

Share

தமிழ் மக்களுக்கு குறி வைக்கும் சிங்கள கடும்போக்காளர்கள்! தீ வைக்கும் முயற்சி

இலங்கையில் சிங்கள கடும்போக்காளர்கள் புதிய விடயம் ஒன்றைக் கொண்டு வந்து தீ வைக்க முயற்சி செய்வதாக தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அநுரகுமார திஸாநாயக குற்றஞ்சாட்டியுள்ளார்.

எனினும் நனைந்துள்ள தீப்பெட்டிக்கு தீ வைக்கப்போகிறார்கள், அது முன்னரைப் போன்று பற்றப் போவதில்லை என குறிப்பிட்டுள்ளார்.

நேற்று (30.09.2023) பொலன்னறுவை – கருதுவெல பகுதியில், ஓய்வு பெற்ற முப்படைகள் மன்ற மாநாட்டில் கலந்துகொண்டு உரையாற்றிய போதே இவ்வாறு தெரிவித்துள்ளார்.

மேலும் அவர் தெரிவிக்கையில், தற்போது முஸ்லிம் மக்களுடன் பிரச்சினை இல்லை. மீண்டும் தமிழர்கள் தொடர்பில் பேச ஆரம்பித்துள்ளனர்.

குருந்தூர் விகாரையை மையமாக வைத்து கஜேந்திரகுமார் பொன்னம்பலத்தின் கொழும்பு இல்லம் முற்றுகையிடப்பட்டது. சிங்கள கடும்போக்காளர்கள் புதிய விடயத்தைக் கொண்டுவந்து தீ வைக்கப் போகிறார்கள்.

ஆனால், தீ பற்றப்போவதில்லை. நனைந்துள்ள தீப்பெட்டிக்கு தீ வைக்கப்போகிறார்கள். முன்னரைப் போன்று பற்றுவதில்லை. தமிழ் மக்கள் அது தொடர்பில் மிகுந்த அவதானத்துடன் இருக்கிறார்கள் என குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன், மரண அச்சுறுத்தல் இருப்பதாகவும் அதனால் நாட்டை விட்டு வெளியேறியதாகவும் நீதிபதி சரவணராஜா கூறியது உண்மையென்றால் அது பாரதூரமான நிலைமையாகும்.

நீதிபதியின் இந்தக் கூற்றுகள் உண்மையாக இருந்தால், ஒரு நாடாக நாம் எங்கே இருக்கிறோம்? என்பதை சிந்திக்கவேண்டியுள்ளது.

ஒரு நீதிவான் அரசாங்கத்திற்கு எதிராக பாரபட்சமில்லாத தீர்ப்பை வழங்கியதற்காக மரண அச்சுறுத்தல்களைச் சந்திக்க நேர்ந்தால், அது ஒரு தீவிரமான சூழ்நிலையாகும்.

யுத்தம் முடிந்த பின்னும் ஆட்சியாளர்கள் எப்போதும் பிரிவினையை விரும்புகின்றனர், ஒற்றுமையை ஒருபோதும் விரும்பவில்லை.

எனவே, இவற்றின் பின்னணியில் உள்ள சதியை கண்டறிய விசாரணை நடத்தப்பட வேண்டும் என்று அநுரகுமார திஸாநாயக கோரிக்கை விடுத்துள்ளார்.

Share
தொடர்புடையது
Murder 5
இலங்கைசெய்திகள்

இலங்கைக்கான இந்திய துணை உயர்ஸ்தானிகரை சந்தித்த செல்வம் அடைக்கலநாதன் எம்பி

இலங்கைக்கான இந்திய துணை உயர்ஸ்தானிகர் சாய் முரளியை தமிழீழ விடுதலை இயக்கம் ரெலோ சார்பாக கட்சியின்...

Murder 4
இலங்கைசெய்திகள்

கிழக்கு மாகாண அபிவிருத்தி தொடர்பில் கலந்துரையாடல்

கிழக்கு மாகாண ஆளுநர் ஜயந்த லால் ரட்ணசேகர மற்றும் கிழக்கு மாகாண அமைச்சுகள் மற்றும் திணைக்கள...

Murder 2
இலங்கைசெய்திகள்

ரணில் எடுத்த கடுமையான முடிவுகள்! தொடரும் அநுர தரப்பு

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் கடினமான தீர்மானங்களினால் நாட்டை மீட்க முடிந்தது என நிதி அமைச்சின்...

10
இலங்கைசெய்திகள்

இலங்கையில் சிங்களவர்களுக்கு அநீதி இழைக்கப்பட்டதாம்! சரத் வீரசேகர குற்றச்சாட்டு

இலங்கையில் சிங்கள இனத்துக்கே அநீதி இழைக்கப்பட்டு வருகின்றது எனவும், தமிழ் தரப்பினரை மட்டுமே ஐ.நா. மனித...