உலகம்
காட்டுத் தீயைக் கட்டுப்படுத்தும் ஆடுகள்!
காட்டுத் தீயைக் கட்டுப்படுத்தும் ஆடுகள்!
அமெரிக்காவில் காட்டுத்தீயைக் கட்டுப்படுத்தும் பணியில் அதிகாரிகள் ஆடுகளைப் பயன்படுத்திவரும் சம்பவம் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
அமெரிக்காவின் கலிபோர்னியா மாநிலத்தில் ஆண்டுதோறும் சராசரியாக 40 லட்சம் ஏக்கர் காடுகள் காட்டுத்தீக்கு இரையாகி வருகின்றன.
இந்நிலையில் கோடை வெயிலில் காய்ந்த புற்களும், மண்டிக்கிடக்கும் புதர்களும் காட்டுத்தீ பரவலை அதிகரிப்பதால் அவற்றை அப்புறப்படுத்தும் விதமாக ஆடுகளை வாடகைக்கு எடுத்து குறித்த பகுதியில் மேயவிட்டு வருகின்றனர்.
ஒரு ஆட்டு மந்தை ஒரே நாளில் ஒரு ஏக்கர் புதர்களை அப்புறப்படுத்திவிடுவதாக அவர்கள் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.