உலகம்
பூனை என நினைத்து கருஞ்சிறுத்தையை வளர்த்த ரஷ்ய பெண்!
பூனை என நினைத்து கருஞ்சிறுத்தையை வளர்த்த ரஷ்ய பெண்!
ரஷ்யாவைச் சேர்ந்த பெண்ணொருவர் பூனை என நினைத்து கருஞ்சிறுத்தையை வளர்த்தது பேசுபொருளாகியுள்ளது.
விக்டோரியா என்ற ரஷ்ய பெண், சைபீரியா காட்டுப் பகுதியில் கைவிடப்பட்ட பூனைக்குட்டி ஒன்றை கண்டுள்ளார்.
தனித்துவிடப்பட்ட அந்த உயிரினத்திற்கு காட்டில் ஆபத்து நேரிடலாம் என நினைத்த அவர், அதனை வீட்டிற்கு எடுத்துச் சென்று வளர்க்க ஆரம்பித்தார்.
லூனா என அதற்கு பெயரிட்டு மகிழ்ந்த விக்டோரியா, நாளடைவில் அதன் வளர்ச்சியைக் கண்டு மிரண்டுள்ளார். ஏனென்றால் லூனா பெரிதாக வளர்ந்த பின்பு தான் அது கருஞ்சிறுத்தை என்று தெரிய வந்துள்ளது.
எனினும் லூனா மீது கொண்ட அன்பினால் விக்டோரியாவுக்கு அதனை பிரிய மனமில்லை. எனவே, கருஞ்சிறுத்தையை வளர்ப்பதை தொடர்கிறார்.
மேலும் டிக்டாக்கில் லூனாவின் செயல்பாடுகளை பதிவிட்டு உலகம் முழுவதும் ரசிகர்களை பெற்றுள்ளார்.
என்ன தான் காட்டு விலங்காக இருந்தாலும், சிறு வயதில் இருந்தே வீட்டில் வளர்ந்ததால் மற்ற சிறுத்தைகள் போல் இல்லாமல் சாந்தமான விலங்காக லூனா இருப்பதாக விக்டோரியா கூறுகிறார்.