rtjy 254 scaled
உலகம்செய்திகள்

பாடசாலை மைதானங்களில் சிறுவர்களுக்கு போர் பயிற்சி: ரஷ்யாவிற்கு எதிர்ப்பு

Share

பாடசாலை மைதானங்களில் சிறுவர்களுக்கு போர் பயிற்சி: ரஷ்யாவிற்கு எதிர்ப்பு3

ரஷ்யா பாடசாலைகளில் குழந்தைகளை மறைமுகமாக போரில் ஈடுபடுத்த தயார்படுத்தி வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது

போர் 575 நாட்களுக்கும் மேலாக தொடர்ந்து நடைபெற்று வரும் நிலையில் போரில் வெற்றி பெற இரு தரப்பும் பல்வேறு வழிகளை பின்பற்றி வருகின்றது.

அந்த வகையில் ரஷ்யா, தன் நாட்டு பாடசாலைகளில் குழந்தைகளையும் மறைமுகமாக போரில் ஈடுபடுத்த தயார்படுத்தி வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

ரஷ்யாவில் பரவலாக அனைத்து இடைநிலைக்கு மேற்பட்ட பாடசாலைகளிலும் குழந்தைகளுக்கு பதுங்கு குழி தோண்டுவது, கையெறி குண்டு வீசுவது, துப்பாக்கியை கையாளுதல் உட்பட பல போர்திறன் பயிற்சியை வழங்கி வருகின்றது.

நாட்டிற்காக தியாகம் செய்வதை பாராட்டும் விதமாக பாடசாலை கல்வியில் பாடதிட்டங்களும்மாற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

பெரும் பொருட்செலவில் ரஷ்யா ஈடுபட்டு சுமார் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பயிற்சி கூடங்களை அமைத்துள்ளதுடன், உக்ரைன் போர், தேசப்பற்று மற்றும் இராணுவ பற்று ஆகியவை பாடத்திட்டங்களில் புதியதாக சேர்க்கப்பட்டுள்ளது.

உயர்நிலை பாடசாலைகளில் மாணவர்கள் துப்பாக்கியை பயன்படுத்துவதற்கும், தானியங்கி துப்பாக்கிகளை கையாளுவதற்கும், பிரித்து கோர்ப்பதற்கும் கைதேர்ந்த நிபுணர்களால் பயிற்றுவிக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், பாடசாலை குழந்தைகள் போர் வீரர்கள் அணியும் உடை மற்றும் தொப்பி ஆகியவற்றை தைத்து தரவும் பயிற்சியளிக்கப்படுவதுடன் இன்றைய குழந்தைகளை எதிர்கால ரஷ்ய போர் வீரர்களாக கட்டாயபடுத்தி மாற்ற முயல்வதற்கு சமூக வலைதளங்களில் பயனர்கள் அந்நாட்டிற்கு கண்டனம் தெரிவித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Share
தொடர்புடையது
world 231
செய்திகள்உலகம்

ஹோர்முஸ் நீரிணையை இனி மூடப்போவதில்லை: ஈரானின் உறுதிமொழியை அறிவித்தார் டொனால்ட் டிரம்ப்!

சர்வதேச எரிசக்தி விநியோகத்தின் உயிர்நாடியாக விளங்கும் ஹோர்முஸ் நீரிணையை (Strait of Hormuz) இனிவரும் காலங்களில்...

world 230
செய்திகள்இலங்கைபிராந்தியம்

நாய்கள் அச்சப்படுவதாகக் கூறி பட்டாசு கொளுத்த வேண்டாமெனக் கேட்ட பெண் மீது தாக்குதல்: ஒருவர் கைது!

மொரகஹஹேன பகுதியில் பட்டாசு கொளுத்துவதை நிறுத்துமாறு கோரிய பெண் ஒருவர் மீது, அவரது அண்டை வீட்டார்...

world 229
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பெட்ரோல் வாகனங்களுக்கு மீண்டும் QR முறை: தற்காலிக சலுகை இன்று நள்ளிரவுடன் நிறைவு!

சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு பண்டிகைக் காலத்தை முன்னிட்டு பெட்ரோல் வாகனங்களுக்கு வழங்கப்பட்டிருந்த தற்காலிக கியூ.ஆர்...

world 228
செய்திகள்உலகம்

ரஷ்ய எண்ணெய் மீதான தடை விலக்கை மேலும் ஒரு மாதம் நீடித்தது அமெரிக்கா!

சர்வதேச எரிசக்தி சந்தையில் நிலவும் கடும் விலை ஏற்றம் மற்றும் விநியோகத் தட்டுப்பாடுகளைக் கருத்திற்கொண்டு, ரஷ்யாவின்...