உலகம்
ஆசிரியரின் முகம் சுளிக்க வைக்கும் கதை!
ஆசிரியரின் முகம் சுளிக்க வைக்கும் கதை!
12 வயது சிறுவனை திருமணம் செய்துக்கொண்ட 34 வயது ஆசிரியரின் காதல் கதையானது தற்போது ஒரு பேச்சுப்பொருளாக இருந்து வருகின்றது.
அந்த ஆசிரியரின் கதையை விரிவாக இந்த பதிவில் தெரிந்துக்கொள்வோம்.
உலகிலேயே மிகவும் மோசமான ஆசிரியை என்ற பட்டத்தை பெற்றுக்கொண்ட முதல் ஆசிரியராக கருதப்படுபவர் மேரி கே லெட்டோர்னோ.
இந்த ஆசிரியர் வாஷிங்டன் மாநிலத்தில் உள்ள ஒரு பள்ளியில் ஆசிரியையாக பணியாற்றி வந்துள்ளார். அந்த பள்ளியில் தான் விஜி ஃபுலாவ் என்ற சிறுவனும் ஆறாம் வகுப்பு படித்து வந்துள்ளார்.
இந்நிலையில் தான் அந்த ஆசிரியைக்கு சிறுவன் மீது ஈர்ப்பு ஏற்பட்டுள்ளது. அதனால் அந்த மாணவனுடன் உடல் ரீதியிலான உறவை ஏற்படுத்திக் கொண்டார் மேரி.
அப்போது மேரிக்கு 34 வயது. அவர் எற்கனவே திருமணமாகி 3 குழந்தைகளுக்கு தாயாகவும் இருந்துள்ளார். இந்த விடயமானது வெளியில் வந்தவுடன் உடனே மேரியை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
இந்நிலையிலும் சிறையில் இருந்து வெளியே வந்து , விஜியுடனான உறவை மேரி தொடர்ந்துள்ளார். இந்த உறவின் மூலம் இரண்டு குழந்தைகளையும் பெற்றெடுத்துள்ளார் மேரி.
இவர்கள் இவரும் கடந்த 2005 ஆம் ஆண்டு திருமணம் செய்துள்ளார்கள். மேலும் இவர்கள் சுமார் 14 ஆண்டுகளாக தம்பதிகளாக வாழ்ந்து வந்துள்ளனர்.
இல்லற் வாழ்க்கையில் இருந்து விலகிய பிறகும், இருவரும் நெருக்கமாக இருந்துள்ளனர்.
இந்நிலையில் கடந்த 2020 ஆண்டு புற்றுநோய் காரணமாக மேரி உயிரிழந்துள்ளார். இந்நிலையில் இவர்களின் உறவு குறித்து விஜி ஒரு விளக்கத்தை தெரிவித்துள்ளார்.
மேரிக்கு முதலில் முத்தம் கொடுத்தது நான் தான் என்றும், இருவரும் ஒருவரையொருவர் காதலித்தாலும் தனது வாழ்க்கையின் கடைசி கட்டத்தில், மேரி தனது வாழ்க்கையில் எடுத்த சில முடிவுகளுக்காக வருந்தியதாகவும் அவர் தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.