நாரஹேன்பிட்டிய தனியார் வைத்தியசாலை ஒன்றில் கைக்குண்டு கண்டெடுக்கப்பட்ட சம்பவம், தொடர்பாக கைதுசெய்யப்பட்ட நபர் வாக்குமூலம் அளித்துள்ளார்.
இந்த சம்பவம் தொடர்பாக சந்தேகத்தின் பேரில் இருவர் கைதுசெய்யப்பட்டிருந்தனர். அவ்வாறு கைதுசெய்யப்படட இருவரில் ஒருவரே இந்த கைக்குண்டை வைத்துள்ளமை கண்டறியப்பட்டது.
மேலும் கைக்குண்டை வைத்த நபரே கைக்குண்டு உள்ளமை தொடர்பாக தகவலும் வழங்கியுள்ளமை தெரியவந்துள்ளது.
இவ்வாறு தகவல் வழங்கினால் வழங்கப்படும் பணத்தொகையை பெற்றுக்கொள்வதற்காகவே இந்த திட்டம் தீட்டப்பட்டது எனவும் தெரிவிக்கப்படுகின்றது.
நாரஹேன்பிட்டியிலுள்ள தனியார் வைத்தியசாலையில் நேற்றுமுன்தினம் (14) பொலிஸாரால் கைக்குண்டு மீட்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
Leave a comment