aarja
பொழுதுபோக்குசினிமா

ஆயுதபூஜைக்கு ‘அரண்மனை 3’

Share

சுந்தர்.சி இயக்கத்தில் வெளியான அரண்மனை படத்தின் இரண்டு பாகங்களும் நல்ல வரவேற்பை பெற்று வசூலிலும் பல்வேறு சாதனைகளைப் படைத்தது.

தற்போது அரண்மனை படத்தின் 3-ம் பாகம் தயாராகி உள்ளது. இப் படத்தையும் சுந்தர்.சி இயக்கி உள்ளார்.

இதில் கதாநாயகனாக ஆர்யாவும், அவருக்கு ஜோடியாக ராஷி கண்ணா, ஆண்ட்ரியா, சாக்‌ஷி அகர்வால் ஆகிய மூன்று கதாநாயகிகளும் நடித்துள்ளனர்.

மேலும் விவேக், யோகிபாபு ஆகியோர் காமெடி வேடங்களில் நடித்து வருகின்றனர். இப் படத்துக்கு சத்யா இசையமைத்துள்ளார்.

இந்நிலையில், ‘அரண்மனை 3’ படத்தின் வெளியீட்டு உரிமையை உதயநிதி ஸ்டாலினின் ரெட் ஜெயண்ட் மூவீஸ் நிறுவனம் கைப்பற்றியுள்ளது.

மேலும், இப் படத்தின் ரிலீஸ் திகதியும் அறிவிக்கப்பட்டு உள்ளது. அதன்படி இப் படம் வருகின்ற ஒக்டோபர் 14 ஆம் திகதி ஆயுதபூஜை பண்டிகையன்று திரையரங்குகளில் வெளியிடப்படும் என அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளனர்.

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
Untitled 38
சினிமாபொழுதுபோக்கு

த.வெ.க கொடி நிறத்தில் திரிஷாவின் உடை: ரசிகர்கள் விவாதம்!

தமிழக வெற்றிக் கழகம் என்ற அரசியல் கட்சியைத் தொடங்கி, நடிகர் விஜய் தீவிரமாகச் செயல்பட்டு வரும்...

Untitled 36
சினிமாபொழுதுபோக்கு

சமூக வலைதளங்களில் பேசுபொருளாகும் விஜய் – திரிஷா விவகாரம்: வைரலாகும் புதிய தகவல்கள்!

நடிகர் விஜய் மற்றும் நடிகை திரிஷா குறித்து கடந்த சில நாட்களாக சமூக வலைதளங்களில் பரவி...

05 21
பொழுதுபோக்குசினிமா

பாக்ஸ் ஆபீஸ் சாதனை: 4 நாட்களில் 750 கோடி வசூலித்து மிரட்டும் ‘துரந்தர் 2’!

பாலிவுட் இயக்குனர் ஆதித்யா தார் இயக்கத்தில் ரன்வீர் சிங், மாதவன், அக்சய் கண்ணா, அர்ஜுன் ராம்பால்...

13 17
சினிமாபொழுதுபோக்கு

தயாரிப்பாளராக அவதாரம் எடுத்த நடிகர் அஜித்: ‘அஜித்குமார் ஸ்போர்ட்ஸ் சர்வீஸ்’ பெயரில் புதிய நிறுவனம்!

தமிழ் சினிமாவின் முன்னணி நட்சத்திரமும், சர்வதேச அளவிலான கார் பந்தய வீரருமான அஜித்குமார், தற்போது திரைத்துறையில்...