tamilni 237 scaled
இலங்கைசெய்திகள்

கஜேந்திரன் எம்.பி மீதான தாக்குதல்: நீதியான விசாரணை

Share

கஜேந்திரன் எம்.பி மீதான தாக்குதல்: நீதியான விசாரணை

திருகோணமலையில் பொலிஸார் முன்னிலையில் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராசா கஜேந்திரன் மீது தாக்குதல் நடத்தப்பட்டமை தொடர்பில் முறையான நீதி விசாரணை அவசியம் என்று நாடாளுமன்றத்தில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இன்று (19.09.2023) காலை ஆரம்பமான நாடாளுமன்ற அமர்வின்போது உரையாற்றிய தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் இந்தக் கோரிக்கையை விடுத்தார்.

இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில்,

“சக நாடாளுமன்ற உறுப்பினரான உத்திக பிரேமரத்ன துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்திலிருந்து உயிர் தப்பியுள்ளார்.

அதேவேளை, திருகோணமலையில் சக நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராசா கஜேந்திரன் தாக்கப்பட்டு உயிர் அச்சுறுத்தலை எதிர்கொண்டுள்ளார்.

இவ்விரு சம்பவங்கள் தொடர்பாக முறையான நீதி விசாரணை மேற்கொள்ளப்பட்ட வேண்டும் என்று சபாநாயகரிடம் கோரிக்கை விடுக்கின்றேன்” என குறிப்பிட்டுள்ளார்.

Share
தொடர்புடையது
preschool kids
இலங்கை

அனைவரும் சமம் – அரசாங்கம் கொண்டுவரும் சிறந்த திட்டம்.

  அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று ஊடகவியலாளர் சந்திப்பு ஒன்று இடம்பெற்றுள்ளது. குறித்த சந்திப்பில் கலந்து...

Pillayan
இலங்கை

இன்றைய தினம் பிள்ளையானுக்கு நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு!

கிழக்கு மாகாணத்தில் இடம்பெற்றதாகக் கூறப்படும் ஐந்து கொலைச் சம்பவங்கள் தொடர்பான வழக்கில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில்...

Ranil Namal
இலங்கை

ரணிலுடன் நாமல் பேசியது என்ன?

அரசாங்கத்திற்கு அழுத்தம் கொடுக்கும் வகையில் ராஜபக்ச தரப்பினால் பல்வேறு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகிறன. இந்த நடவடிக்கைகளுக்கு,...

Fire Breaks
இலங்கை

களுத்துறை மாவட்ட செயலகத்தில் தீ – துண்டிக்கப்பட்ட மின்சாரம்.

  களுத்துறை மாவட்ட செயலகத்தில் தீப்பரவல் சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது. இன்று காலை சுமார் 8.30...