இன்றைய ராசி பலன் 12.09.2023 – Today Rasi Palan
இன்றைய ராசிபலன் செப்டம்பர் 12, 2023, சோபகிருது வருடம் ஆவணி 26 செவ்வாய்க் கிழமை. சந்திரன் கடக ராசியில் உள்ள ஆயில்யம் நட்சத்திரத்தில் சஞ்சரிக்கிறார். திரிதியை திதி நடக்கக்கூடிய இன்று சித்த யோகம் உள்ள நாள். தனுசு ராசிக்கு பூராடம், உத்திராடம் சந்திராஷ்டமம் உள்ளது. மேஷம் முதல் மீனம் வரை 12 ராசிகளுக்கான இன்றைய ராசி பலனை ஜோதிட நிபுணர் பாரதி ஸ்ரீதர் அவர்கள் கணித்துக் கூறியுள்ளார்.
மேஷம்
மேஷம் ராசி அன்பர்களுக்கு இன்று தன லாபங்கள் கிடைக்கும். பங்குசந்தை முதலீடுகள் நல்ல லாபத்தை தரக்கூடியதாக இருக்கும். வழக்கு, விசாரணைகள் உங்களுக்கு சாதகமாக இருக்கும். இன்று சமூகப் பணியின் மூலம் உங்கள் புகழ் அதிகரிக்கும். உங்கள் தாயாரின் உடல்நிலையில் சில பிரச்னைகள் ஏற்படலாம். உங்கள் நிதி செலவுகளை அதிகரிக்கக்கூடும். வீடு சம்பந்தமான பிரச்னைகள் உள்ளவர்கள் இன்று பைரவருக்கு தீபம் ஏற்றி வழிபாடு செய்யவும்.
ரிஷபம்
ரிஷபம் ராசி அன்பர்களுக்கு இன்று நாள் முழுவதும் சந்திர பகவான், ராசி நாதனுடன் சேர்ந்து இருப்பது நன்மையைத் தரும். தனலாபங்கள் நிறைந்திருக்கக்கூடிய நாளாக இருக்கும். இன்று பெண்களுக்கு பிறந்த வீட்டின் மூலம் சாதக பலன் கிடைக்கும். இன்று அதிர்ஷ்டம் நிறைந்த நாளாக இருக்கும். காதல் மேலும் வலுவடையும். வியாபாரம் செய்பவர்கள் இன்று சில புதிய வாய்ப்புகளைப் பெறுவார்கள், இது முன்னேற்றத்திற்கு ஒரு காரணியாக மாறும்.
மிதுனம்
மிதுன ராசி அன்பர்களுக்கு இன்று மன நிறைவு கிடைக்கும். பல நாட்களாக குடும்பத்தில் இருந்த பிரச்னைகள், குடும்ப விவகாரங்கள் ஆகியவை இன்றைய நாளில் தீரும். 2ல் இருக்கும் சுக்கிரன், சந்திரன் குடும்பத்தில் இருக்கும் மன கசப்புகளை விலக்கி ஒற்றுமை மேம்படுத்தும். வீடு அல்லது வியாபாரம் தொடர்பாக எடுக்கும் எந்த ஒரு முடிவாலும் நன்மை பயக்கும்.
கடகம்
கடக ராசி அன்பர்களுக்கு இன்று நாள் முழுவதும் திருப்தியான நாளாக அமைகிறது. சுக்கிரன், சந்திரனின் சஞ்சாரம் ராசியில் இருப்பதால் உடல் ஆரோக்கியத்தில் சிறு சிறு பிரச்னைகளைத் தர வாய்ப்புள்ளது. ஆயில்யம் நட்சத்திரத்தை சேர்ந்தவர்கள் கூடுதல் கவனத்துடனும், புனர்பூசம் சேர்ந்தவர்களுக்கு மன அமைதி தரக்கூடிய நாளாக இருக்கும்.
இன்று விநாயகர் அபிஷேகம், வழிபாடு நன்மையைத் தரும்.
சிம்மம்
சிம்ம ராசி அன்பர்களுக்கு இன்று உங்கள் உடல் ஆரோக்கியத்தில் நல்ல முன்னேற்றத்தைக் காண முடியும். இன்று மன நிறைவும், நீண்ட பயணமும் ஏற்பட வாய்ப்புள்ளது. இன்று உங்களுக்கு காலை வேளையில் நல்ல செய்திகள் கிடைக்க வாய்ப்புள்ளது.
இன்று சிவ வழிபாடு செய்ய மனக்குறைகள் நீங்கும்.
கன்னி
கன்னி ராசி அன்பர்களுக்கு இன்று நாள் முழுவதும் சற்று அலைச்சல்கள் அதிகமாக இருக்கும். பணம் கொடுக்கல் வாங்கலில் இருந்த பிரச்னைகள் தீரும். நண்பர்களின் உதவி கிடைக்கும்.
கணபதி வழிபாடு செய்யவும்.
துலாம்
துலாம் ராசி அன்பர்களுக்கு இன்று மறைமுக எதிரிகளால் சிறு சிறு பிரச்னைகள் வந்து போகும். 10ல் இருக்கும் சுக்கிரன், சந்திரனின் சேர்க்கை உங்களுக்கு அலைச்சலைத் தரக்கூடியதாக இருக்கும். சந்திரனின் சஞ்சாரம் உங்களுக்கு வேலை சார்ந்த விஷயங்களில் வெட்டி செலவுகள் தரக்கூடியதாக இருக்கும். ஆகவே காலை வேளையில் குல தெய்வ வழிபாடு செய்து நாளை துவங்கவும்.
விருச்சிகம்
விருச்சிக ராசி அன்பர்களுக்கு இன்று கணவன், மனைவி உறவுகள் சிறு, சிறு குறைபாடுகள் தரும். இன்று பிறரால் பிரச்னைகள் வரும். மாலை நேரத்தில் பிர்ச்னைகள் தீரும். இன்று காரியத்தில் கவனமாக இருக்கவும். கூட்டுத் தொழில் செய்பவர்கள் கவனமாக இருப்பது நல்லது. பணம் கொடுக்கல் வாங்கலில் நண்பர்களுடன் சேர்ந்து செய்யக்கூடிய விஷயங்களில் கவனம் தேவை..
தனுசு
தனுசு ராசி அன்பர்களுக்கு இன்று ராசி நாதன் குருவின் அமைப்பு, 8ல் சுக்கிரன், சந்திரனின் அமைப்பால் பிரச்னைகள் தரக்கூடியதாக இருக்கும். இன்று நாள் முழுவதும் உங்களுக்கு சந்திராஷ்டமம் இருப்பதால் வேலைகளில் கவனமாக இருப்பது அவசியம். குடும்பத்தில் நிம்மதி இல்லாத தருணமாகவே அமையும். தூக்கமின்மை இருக்கும்.
முருகப்பெருமான் வழிபாடு செய்யவும்.
மகரம்
மகர ராசி அன்பர்களுக்கு இன்று நாள் முழுவதும் உற்சாகத்தைத் தரக்கூடிய நாளாக இருக்கும். 8ம் இடத்தில் சூரியன், புதனின் சேர்க்கையால் சிறு மருத்து செலவுகள் வந்து செல்ல வாய்ப்புள்ளது. 10ல் இருக்கும் கேது அலுவலக வேலையில் அலைச்சலைத் தரக்கூடியதாக இருக்கும். அவிட்டம் நட்சத்திரத்தித்தை சேர்தவர்களுக்கு சாதக நாளாக இருக்கும்.
உத்திராடம் நட்சத்திரத்தை சேர்ந்த்வர்களுக்கு சந்திராஷ்டம தினம்.
கும்பம்
கும்ப ராசி அன்பர்களுக்கு இன்று நாள் முழுவதும் மன நிறைவைத் தரக்கூடிய நாள். இன்றைய நாளில் பெண்களுக்கு பிறந்த வீட்டால் நன்மை உண்டாகும். கொடுக்கல், வாங்கலில் இருந்த பிரச்னைகள் தீரும். வழக்குகள், விசாரணைகள் இருப்பின் அதை ஒத்திப் போடுவது நல்லது.
மீனம்
மீன ராசி அன்பர்களுக்கு இன்று பூரட்டாதி, உத்திரட்டாதி நட்சத்திரத்தை சேர்ந்தவர்களுக்கு மிகவும் அருமையான நாளாக இருக்கும். இன்று மனதிற்கு ஆறுதலான நாளாக அமைகிறது. குடும்பம் சம்பந்தப்பட்ட பிரச்னைகளும், சகோதர, சகோதரிகள் இடையே இருந்த கருத்து வேறுபாடுகள், பண விவகாரங்கள் அனைத்தும் தீரக்கூடிய நாளாக இருக்கும். உயர்வைத் தரக்கூடிய நாள்.
- 2024 Rasi Palan in Tamil
- daily rasi palan
- daily rasi palan sun tv
- daily rasi palan tamil
- Featured
- indraya rasi palan
- indraya rasi palan tamil
- nalaiya rasi palan
- pugazh media rasi palan
- raasi palan
- rasi palan
- rasi palan sun tv
- rasi palan today
- rasi palan today tamil
- sithariyal maruthuvam rasi palan
- sithariyal rasi palan
- sun tv rasi palan
- sun tv rasi palan today
- tamil rasi palan
- Today Rasi Palan
- today rasi palan in tamil
- tomorrow rasi palan
- weekly rasi palan
Comments are closed.