rtjy 83 scaled
இலங்கைசெய்திகள்

ஈஸ்டர் தாக்குதலின் பிரதான சூத்திரதாரிகளை சர்வதேச விசாரணைக்கு உட்படுத்துங்கள்!

Share

ஈஸ்டர் தாக்குதலின் பிரதான சூத்திரதாரிகளை சர்வதேச விசாரணைக்கு உட்படுத்துங்கள்!

“இலங்கையில் 2019ஆம் ஆண்டு உயிர்த்த ஞாயிறு தினத்தில் இடம்பெற்ற தாக்குதலின் பிரதான சூத்திரதாரிகள் எனச் ‘சனல் 4’ ஆவணப்படத்தில் குற்றஞ்சாட்டப்பட்டுள்ள சந்தேகநபர்கள் உடனடியாகக் கைது செய்து அவர்கள் சர்வதேச விசாரணைக்கு உட்படுத்தப்பட வேண்டும்” என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது,

“உயிர்த்த ஞாயிறு தினத் தாக்குதல் மிகவும் வன்மையாகக் கண்டிக்கப்பட வேண்டிய விடயம். அந்த மிலேச்சத்தனமான தாக்குதல் தொடர்பாக இற்றை வரையிலும் என்ன விசாரணை நடந்தது? என்ன முன்னேற்றம் நடந்தது? என்று எவருக்கும் தெரியாமல் உள்ளது.

அந்தத் தாக்குதல் சம்பந்தமாகப் பல சந்தேகத்துக்குரிய விடயங்கள் வெளிவந்திருக்கின்றன. 2019 ஆம் ஆண்டில் ஆட்சி அதிகாரத்தைப் பிடிக்கவே அந்தத் தாக்குதல் ஒரு தரப்பால் திட்டமிட்டு நடத்தப்பட்டுள்ளது என்ற பொதுவான கருத்து நிலவுகின்றது.

இதைத்தான் ‘சனல் 4‘ தொலைக்காட்சி பல ஆதாரங்களுடன் சர்வதேசத்துக்குப் படம் பிடித்துக் காட்டியுள்ளது. இது தொடர்பில் சர்வதேச விசாரணை நடத்தப்பட வேண்டும் என்ற கருத்தும் பல தரப்பினராலும் தற்போது முன்வைக்கப்பட்டு வருகின்றது.

உள்நாட்டில் நடைபெற்ற விசாரணைகளில் எந்தவித முன்னேற்றமும் இல்லாதபடியால் சர்வதேச விசாரணை வேண்டுமெனப் பல தரப்பினரும் வலியுறுத்துவது ஒரு நியாயமான கோரிக்கை.

இந்தக் கருமத்தில் சர்வதேச மனித உரிமைகள் அமைப்புக்கள், ஐ.நா. மனித உரிமைகள் ஆணைக்குழு அடங்கிய சர்வதேச சமூகம் மிகவும் அக்கறை செலுத்த வேண்டும்.

ஈஸ்டர் தாக்குதலின் பிரதான சூத்திரதாரிகள் எனக் குற்றஞ்சாட்டப்பட்டுள்ள சந்தேகநபர்கள் உடனடியாகக் கைது செய்யப்பட வேண்டும்.

அவர்கள் சர்வதேச விசாரணைக்கு உட்படுத்தப்பட வேண்டும். உண்மைகள் கண்டறியப்பட வேண்டும். பாதிக்கப்பட்ட மக்களுக்கு நீதி கிடைக்க வேண்டும்.” என தெரிவித்துள்ளார்.

Share
தொடர்புடையது
பேராசிரியர் சரத் அபேகோன்
இலங்கை

ஜனாதிபதிக்கு பறந்த பதவி விலகல் கடிதம்.

தமது பதவியிலிருந்து விலகுவதாக மத்திய மாகாண ஆளுநர் பேராசிரியர் சரத் அபேகோன், பதவி விலகல் குறித்த...

are 2
இலங்கை

முன்னாள் மாகாண சபை உறுப்பினர் கைது.

முன்னாள் மாகாண சபை உறுப்பினருமான ஜெயலத் பண்டார திசாநாயக்க, நிதி மோசடி குற்றச்சாட்டு தொடர்பாக கைது...

j poretest d
இலங்கை

மாநகர சபைக்குள் நுழைய வேண்டிய நிலை உருவாகும் – அதற்கு முன் விரைந்து நடவடிக்கை எடுங்கள்!

யாழ்ப்பாணம் – காக்கை தீவு மக்கள் மாநகர சபைக்கு முன்பாக போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அங்கு...

arested 1
இலங்கை

வெளிநாட்டில் இருந்து வருகை தருவோரை இலக்குவைத்து நடத்தப்படும் சம்பவம்.

திருட்டுச் சம்பவங்களுடன் தொடர்புடைய இருவர் நேற்றைய தினம் யாழ். மாவட்ட குற்றத்தடுப்புப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்....