அநுராதபுரம் சிறைச்சாலையில் தமிழ் அரசியல் கைதிகளை மண்டியிடச்செய்து கொலை மிரட்டல் விடுத்துள்ள இராஜாங்க அமைச்சர் லொஹான் ரத்வத்தவை உடனடியாக பதவி நீக்கம் செய்ய வேண்டும்.
இவ்வாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கோரிக்கை விடுத்துள்ளது .
கடந்த 12 ஆம் திகதி (ஞாயிற்றுக்கிழமை) அநுராதபுரம் சிறைச்சாலைக்கு சென்ற இராஜாங்க அமைச்சர் லொஹான் ரத்வத்தே இரண்டு அரசியல் கைதிகளை மிரட்டியுள்ளார்.
அத்துடன் அவர்களை துப்பாக்கி முனையில் மண்டியிடச் செய்து கொலை மிரட்டல் விடுத்துள்ளார் என தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான கஜேந்திர குமார் பொன்னம்பலம் தனது ருவிட்டரில் தெரிவித்திருந்தார்.
இவ் விவகாரம் குறித்து தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தனது ருவிட்டர் பதிவில், இராஜாங்க அமைச்சரை உடனடியாக பதவியிலிருந்து நீக்க வேண்டும் என அரசாங்கத்திடம் கேட்டுக்கொண்டுள்ளது.
மேலும் கைதிகளுக்கு கொலை மிரட்டல் விடுத்தமை தொடர்பில் விசாரணை நடத்தப்பட்டு அவரை கைது செய்ய வேண்டும் எனவும் கூட்டமைப்பு வலியுறுத்தியுள்ளது.
Leave a comment