இலங்கை
இலங்கையில் பெரும்பாலானோருக்கு ஏற்பட்டுள்ள ஆபத்து
இலங்கையில் பெரும்பாலானோருக்கு ஏற்பட்டுள்ள ஆபத்து
நாட்டில் 10.13 மில்லியன் மக்கள் தங்களை மாற்றிக்கொள்ளும் திறனின்மையால் பாதிக்கப்படுகின்றனர் என ஒரு புதிய ஆய்வு மூலம் கண்டறிந்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
வடக்கு – கிழக்கு மற்றும் வட மத்திய மாகாணங்களைச் சேர்ந்த 10.13 மில்லியன் மக்கள், அதாவது நாட்டின் சனத்தொகையில் 10இல் ஆறு இலங்கையர்கள் நாட்டில் நிலவும் பொருளாதார நெருக்கடி மற்றும் கடன், கல்வி இல்லாமை மற்றும் பேரழிவுகளுக்கு ஏற்ப தம்மை மாற்றிக்கொள்ளும் திறனின்மையால் பாதிக்கப்படுகின்றனர் என இந்த ஆய்வு குறிப்பிடுகின்றது.
ஐக்கிய நாடுகளின் அமைப்பு மேற்கொண்ட ஆய்வின் போதே இந்த விடயம் தெரியவந்துள்ளது. 25,000 குடும்பங்களின் பிரதிநிதிகளை மாதிரியாகக் கொண்டு கடந்த ஆண்டு நவம்பர் முதல் இந்த ஆண்டு மார்ச் வரை கணக்கெடுப்பு நடத்தப்பட்டது.
இதற்கமைய இலங்கையின் மக்கள் தொகையில் 55 சதவீதமானோர் கல்வி, சுகாதாரம், பேரிடர் மற்றும் வாழ்க்கை நிலைமைகள் போன்றவற்றில் ஆபத்தில் இருக்கின்றனர் என இந்த ஆய்வு குறிப்பிடுகிறது.
இதன்படி பாதிப்பை எதிர்கொள்ளும் 12.34 மில்லியன் பேரில், கணிசமான 10.13 மில்லியன் பேர் கிராமப்புறங்களில் வசிப்பவர்களாவர். இவர்கள் குறிப்பாக கிழக்கு, வடக்கு மற்றும் வடமத்திய மாகாணங்களில் வசிக்கின்றனர் என்று ஆய்வு கண்டறிந்துள்ளது.