tamilni 37 scaled
இலங்கைசெய்திகள்

முள்ளிவாய்க்காலிற்கு ஏன் இந்த நிலை! தேடுவாரற்றுக் கிடக்கும் ஈழத் தமிழரின் அடையாளம்

Share

முள்ளிவாய்க்காலிற்கு ஏன் இந்த நிலை! தேடுவாரற்றுக் கிடக்கும் ஈழத் தமிழரின் அடையாளம்

முள்ளிவாய்கால் என்பது ஈழத் தமிழ் மக்களின் ஒரு வரலாற்று அடையாளம். பற்பரிமானத் தியாயங்களின் ஒரு அழிக்கமுடியாத உறைவிடம்.

அந்த உறைவிடத்தின் அடையாளத்தை தமிழ் இனத்தின் எதிரிகளே அழிக்க முற்பட்டுக்கொண்டிருக்கும் தருணங்களில், தமிழ் இனமே அதனை அழிக்கவும், மறைக்கவும் முற்படுகின்றதா என்கின்ற கேள்வி எழுக்கூடியவகையில் முள்ளிவாய்கால் நினைவுத்திடலும், முள்ளிவாய்க்கால் நினைவுத்தூபியும் தற்பொழுது காட்சிதந்துகொண்டிருக்கின்றது.

முள்ளிவாய்க்கால் நினைவுத்திடலும், தூபியும் தேடுவாரற்றுக் கிடப்பது கவலையளிப்பதாகவே இருக்கின்றது.

நூற்றைம்பதாயிரம் மக்களை பலியெடுத்து முற்றுப்பெற்ற இந்த நிலத்தில் நடைபெற்றது இனவழிப்புத் தான் என்று உலகெங்கும் வாதாடி நிறுவ முயன்று கொண்டிருக்கும் தமிழினம், தான் வீழ்ந்த இடத்தை மறந்து போகும் பேராபத்தை எதிர்கொண்டிக்கின்றது.

முள்ளிவாய்க்கால் நினைவு முற்றத்தை தேடி அலைந்து தான் கண்டுகொள்ள வேண்டியிருக்கிறது.

முள்ளிவாய்க்கால் வரும் எவரொருவரும் முள்ளிவாய்க்கால் நினைவிடத்தினை பார்த்தே போகவேண்டும்.

இல்லை குறைந்தபட்சம் அது பற்றிய அறிவோடு அதை அறிந்து கடக்க வேண்டும்.

இந்த சிந்தனை முள்ளிவாய்க்கால் நினைவேந்தலைச் செய்யும் ஒழுங்குபடுத்தல் ஏற்பாட்டாளர்களுக்கு வேண்டும்.

அது இருப்பதாக தெரியவில்லை.

ஆலயங்களுக்கொரு பரிபாலனை சபை போல முள்ளிவாய்க்கால் நினைவிடத்திற்கான ஒரு பொது நிர்வாக சபையை உருவாக்குதல் ஏற்புடையதாகும். நினைவை அனுசரிப்பதோடு கடந்து போகாது வீழ்ந்த இடத்திலிருந்து எழுந்து கொள்ள ஆவன செய்து கொள்ளலாம் இந்த சபை மூலம்.

நினைவிடத்திற்கான வழிகாட்டல் பாதை இனம் காட்டிகளை நிறுவுதல் அவசியமானது. நினைவிடத்தில் பெயர்ப்பலகை ஒன்றையும் நிறுவ வேண்டும். அவை சீராகவும் ஒழுங்குமுறையாகவும் பராமரித்தலுக்கான ஏற்பாடுகளும் அவசியமாகும்.

நானூறாண்டுகளாக வீழ்ந்து போயிருந்த தமிழினம் தனக்குள் இருந்த வீரத்தை இனம் கண்டு இந்த உலகுக்கு எடுத்தியம்பிய பெரும் படை சாய்ந்து கொண்ட நிலம் முள்ளிவாய்க்கால்.

மே – 18. எப்படி வீழ்ந்தோம். எப்படி வீழ்த்தப்பட்டோம். ‘தோற்றோம்’ என்பதை ஏற்றோம் என்றால் தோற்ற காரணம் தேடி ஆராய்வோம்.

தோற்றிட காரணங்கள் எவையென தேடி ஆராய்ந்து தவறுகளிலிருந்து எம்மை நாம் திருத்திக்கொள்ள முள்ளிவாய்க்கால் நினைவு எல்லோரிடமும் நித்தம் மீண்டு கொண்டிருக்க வேண்டும்.

இதற்கான ஒரு வழியாக நினைவுத்திடலினை பேணிப்பராமரிப்பதை முன்னெடுக்கும்.

இளையவர்களிடையே தேடலை தூண்டி நாளைக்காக அவர்களது வாழ்வை ஒழுங்கமைத்துக் கொள்ளவும் உதவிடும் வகையில் பணியாற்றிட வேண்டும்.

சுற்று மதில் முள்ளிவாய்க்கால் நினைவிடத்தினை சூழ வலுவான சுற்று மதில் ஒன்றை அமைத்து அதன் எல்லைகளை எல்லைப்படுத்துவதோடு சுவரின் மீது நினைவு சுமந்த உணர்வு வரிகளை எழுதி வைத்து விட்டால் நினைவிடத்தை பார்த்துச் செல்ல வருவோருடன் அவை மனதால் பேசி உணர்வில் கலந்து விடும். உலக மக்களிடையேயும் சரி ஈழத்தமிழ் மக்களிடையேயும் தெளிவான பார்வையையும் தமிழர் தாம் ஈழத்தில் சுமக்கும் வலிகளையும் எடுத்தியம்பி நீதிக்கான பாதையை விரைவாக்கும்.

சிங்கள மக்களிடையேயும் மாற்றம் வரும். சிங்கள மக்களிடையேயும் தமிழர் உணர்வுகளை எடுத்தியம்பும். தமிழரின் உயர்ந்த நற்குணங்கள் புரிந்து கொள்ள வைக்கும். புரிந்துணர்வால் தமிழரும் உரிமையோடு வாழத்தான் வேண்டும் என்ற எண்ணத்தை விதைக்க விதையாகிப் போகும்.

அரசியலாளர்கள் சிங்கள மக்களை அரசியல் இலாபங்களுக்காக தூண்டி இனங்களுக்கிடையேயான முரண்பாடுகளினால் இலாபமடையும் போது சிங்கள மக்களை விழித்துக்கொள்ள இந்த முயற்சி வைத்து விடும்.

இறந்தவர்கள் மீதான தமிழரின் அதீத மரியாதை பண்பை உலகறியச் செய்யும். ஆற்றலை வெளிக்காட்டும்.

முள்ளிவாய்க்கால் நினைவுத்திடலில் அமையும் சுற்று மதிலின் ஓரமாக மரங்களை நாட்டி வளர்த்தல், தமிழர் வீரம் பேசும் சிலைகளை ஆக்கி வைத்தல், இறுதி யுத்தத்தின் வலிகளை செதுக்கி வைத்தல் என்று அந்த நிலத்தில் ஒரு அறிவாலயத்தை நினைவாலயத்தோடு பேணிக்கொள்ளலாம்.

புலம்பெயர் நாடுகளில் இருந்து சொந்தநாட்டிற்கு வந்து திரும்பும் ஒவ்வொரு தமிழனுக்கும், அடுத்த தலைமுறையினருக்கும் உணர்வுகளைக் கடத்து ஒரு இடமாக அது மாற்றப்படவேண்டும்.

நினைவு நாளில் கூடிப்பேசி கூட்டங்களை நடாத்தி விளக்கேற்றி விட்டு வருடத்தில் ஏனைய நாட்களில் மறந்து கடந்து போதல் நலமன்று.

Share
தொடர்புடையது
Murder Recovered Recovered Recovered 19
இலங்கைசெய்திகள்

கஹவத்தையில் கடும் பதற்றம்! பொதுமக்கள் மீது கண்ணீர் புகைத் தாக்குதல் நடத்தும் பொலிஸார்

கஹவத்தையில் பொலிஸார் மற்றும் பொதுமக்களுக்கு இடையில் ஏற்பட்ட குழப்பநிலை காரணமாக அங்கு கடும் பதற்றமான சூழல்...

Murder Recovered Recovered Recovered 17
இலங்கைசெய்திகள்

எமக்கு தொடர்பில்லை! செம்மணி அவலத்தில் இருந்து பொறுப்பு துறக்கும் அமைச்சர்

செம்மணி புதைகுழி சம்பவங்களுக்கும் தனது கட்சிக்கும் எவ்வித தொடர்பும் இல்லை என கடற்றொழில் அமைச்சர் இராமலிங்கம்...

9
சினிமாசெய்திகள்

பிக்பாஸ் புகழ் ஷாரிக்கிற்கு குழந்தை பிறந்தது.. அவரே வெளியிட்ட குழந்தையின் வீடியோ

தமிழ் சினிமாவில் பிரபல நடிகராக வலம் வந்தவர்கள் உமா ரியாஸ் மற்றும் ரியாஸ் கான் ஜோடி....

8
சினிமாசெய்திகள்

சிவகார்த்திகேயனுடன் மோதும் முன்னணி நடிகர்.. பிரம்மாண்டமாக ஒரே நாளில் வெளியாகும் இரண்டு படங்கள்

ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிப்பில் பிரம்மாண்டமாக உருவாகி வரும் திரைப்படம் மதராஸி. இப்படத்தில் சிவகார்த்திகேயனுடன்...