உலகம்
தைவானில் இடை நிறுத்தப்பட்டுள்ள விமான சேவைகள்
தைவானில் இடை நிறுத்தப்பட்டுள்ள விமான சேவைகள்
தைவானில் ஏற்பட்டுள்ள புயல் காரணமாக தற்காலிகமாக 46 விமான சேவைகள் இடை நிறுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
தீவு நாடான தைவானில் கேப் எலுவான்பி நகரின் கிழக்கு பகுதியில் புதிய புயல் உருவாகி உள்ளது.
ஹைகுய் என பெயரிடப்பட்ட இந்த புயலானது தைவானின் மேற்கு பகுதியை நோக்கி நகர்ந்து வருவதாக கூறப்படுகிறது.
குறித்த புயலானது தைவானில் கரையை கடக்கும்போது மணிக்கு 16 கிலோ மீட்டர் வேகத்தில் பலத்த காற்று வீசும் என அந்த நாட்டின் வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
இதனால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தைவானில் 28 சர்வதேச விமான சேவைகள் மற்றும் 18 உள்நாட்டு விமான சேவைகள் தற்காலிகாமாக நிறுத்தப்பட்டுள்தாக தெரிவிக்கப்படுகிறது.
சில விமானங்கள் புறப்பட தாமதமானதால் விமான நிலையத்துக்கு வந்திருந்த பயணிகள் பெரும் சிரமப்பட்டதாக கூறப்படுகிறது.
அதேபோல் பயணிகளின் பாதுகாப்பு கருதி படகு போக்குவரத்தும் அங்கு தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.