உலகம்
அமொிக்காவில் கடுமையான புழுதிப்புயல்!
அமெரிக்காவில் உள்ள இலினாய்ஸ் மாகாணத்தில் கடுமையான புழுதிப்புயல் ஏற்பட்டுள்ளது.
அங்குள்ள சாங்கமன், மாண்ட்கோமெரி உள்ளிட்ட பகுதிகளில் வீதியில் எதிரே வரும் வாகனங்கள் தெரியாத அளவிற்கு புழுதிப்புயல் சூழ்ந்தது.
இதனால் வீதியில் சுமார் 70இற்கும் மேற்பட்ட கார், லொறி உள்ளிட்ட வாகனங்கள் ஒன்றுடன் ஒன்றாக மோதி விபத்திற்குள்ளாகின. இந்த விபத்துக்களில் இதுவரை 6 பேர் உயிரிழந்துள்ளதாகவும், 37 பேர் படுகாயமடைந்து மருத்துமவனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அந்நாட்டின் தேசிய வானியல் ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிவிப்பின்படி, காற்றின் வேகம் மணிக்கு சுமார் 35 முதல் 45 கி.மீ. வரை இருக்கக் கூடும் என்றும், வீதியில் பயணம் மேற்கொள்வதை தவிர்க்குமாறும் பொதுமக்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
You must be logged in to post a comment Login
ஒரு பின்னூட்டத்தை இட நீங்கள் கட்டாயம் உள்நுழைந்திருக்க வேண்டும்.
Pingback: தைவானில் இடை நிறுத்தப்பட்டுள்ள விமான சேவைகள் - tamilnaadi.com