Connect with us

உலகம்

சட்டவிரோதமாக இந்தியாவிற்குள் நுழைந்த பாகிஸ்தான் இளைஞர்!

Published

on

8 16 scaled

சட்டவிரோதமாக இந்தியாவிற்குள் நுழைந்த பாகிஸ்தான் இளைஞர்!

மனைவியுடன் வாழ சட்டவிரோதமாக இந்தியாவிற்குள் நுழைந்த பாகிஸ்தான் இளைஞர் பொலிசாரால் கைது செய்யப்பட்டார்.

பாகிஸ்தான் கைபர் பக்துன்க்வாவில் உள்ள ஸ்வாட் பள்ளத்தாக்கைச் சேர்ந்த 24 வயது இளைஞர் ஃபைஸ். இவர் துபாயில் உள்ள ஆடை நிறுவனம் ஒன்றில் வேலை செய்து வந்தார். அதே போல், இந்திய மாநிலம் தெலங்கானா, ஹைதராபாத்தைச் சேர்ந்தவர் நேஹா.

இதில், ஃபைஸ் கடந்த 2019 ஆம் ஆண்டு நேஹாவைச் சந்தித்தார். பின்னர், நேஹாவுக்கு துபாயில் வேலை வாங்கி கொடுக்க ஃபைஸ் உதவி செய்தார்.

இதனைத்தொடர்ந்து, ஃபைஸ் மற்றும் நேஹா காதல் திருமணம் செய்து கொண்டனர். இவர்களுக்கு 3 வயதில் மகன் ஒருவர் உள்ளார்.

இதனைத்தொடர்ந்து, நேஹா துபாயில் இருந்து இந்தியாவிற்கு திரும்பியுள்ளார். இதன்பின், ஃபைஸ் இந்தியாவுக்கு வருவதற்கு நேஹா பெற்றோரான ஷேக் ஜுபைர் மற்றும் அப்சல் பேகம் ஆகியோர் போலி சான்றிதழ் பெறுவதற்கு ஏற்பாடு செய்தனர்.

இதற்கு, மாதப்பூரில் உள்ள ஆதார் மையத்திற்கு சென்று ஃபைஸை முகமது கவுஸ் என்று பெயர் மாற்றியும், தங்களது மகன் என்று கூறியும் நேஹாவின் பெற்றோர் பதிவு செய்தனர். இதன்மூலம், போலிச்சான்றிதழ் பெற்ற ஃபைஸ் சட்டவிரோதமாக இந்தியாவிற்குள் நுழைந்தார்.

இதனையறிந்த பொலிசார், பகதூர்புராவில் உள்ள ஆசாத் பாபா நகரில் உள்ள மாமியார் வீட்டில் இருந்த ஃபைஸை கைது செய்தனர். இதில், நேஹாவின் பெற்றோர் தலைமறைவாகினர்.

மேலும், ஃபைஸிடமிருந்து பாகிஸ்தான் பாஸ்போர்ட் மற்றும் மற்ற ஆவணங்களை பறிமுதல் செய்த பொலிசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்

Advertisement

ஜோதிடம்

tamilnaadi 3 tamilnaadi 3
ஜோதிடம்1 நாள் ago

இன்றைய ராசி பலன் : 20 டிசம்பர் 2024 – Daily Horoscope

இன்றைய ராசிபலன் 20.12.2024, குரோதி வருடம் மார்கழி 5 வெள்ளிக் கிழமை, சந்திரன் சிம்ம ராசியில் சஞ்சரிக்கிறார். தனுசு ராசியில் பூராடம், உத்திராடம் நட்சத்திரத்தை சேர்ந்தவர்களுக்கு சந்திராஷ்டமம்...

tamilnaadi 2 tamilnaadi 2
ஜோதிடம்2 நாட்கள் ago

இன்றைய ராசி பலன் : 19 டிசம்பர் 2024 – Daily Horoscope

இன்றைய ராசிபலன் 19.12.2024, குரோதி வருடம் கார்த்திகை 4, வியாழக் கிழமை, சந்திரன் கடகம் ராசியில் சஞ்சரிக்கிறார். தனுசு ராசியில் மூலம், பூராடம் சேர்ந்தவர்களுக்கு சந்திராஷ்டமம் உள்ளது....

tamilnaadi 2 tamilnaadi 2
ஜோதிடம்4 நாட்கள் ago

இன்றைய ராசி பலன் : 17 டிசம்பர் 2024 – Daily Horoscope

இன்றைய ராசிபலன் 17.12.2024, குரோதி வருடம் மார்கழி 2, செவ்வாய்க் கிழமை, சந்திரன் மிதுனம் ராசியில் சஞ்சரிக்கிறார். விருச்சிகம் ராசியில் உள்ள அனுஷம், பேட்டை சேர்ந்தவர்களுக்கு சந்திராஷ்டமம்...

tamilnaadi 1 tamilnaadi 1
ஜோதிடம்1 வாரம் ago

இன்றைய ராசி பலன் : 13 டிசம்பர் 2024 – Daily Horoscope

இன்றைய ராசி பலன் : 13 டிசம்பர் 2024 – Daily Horoscope இன்றைய ராசிபலன் 13.12. 2024, குரோதி வருடம் கார்த்திகை 28 வெள்ளிக் கிழமை,...

tamilnaadi 1 tamilnaadi 1
ஜோதிடம்1 வாரம் ago

இன்றைய ராசி பலன் : 12 டிசம்பர் 2024 – Daily Horoscope

இன்றைய ராசி பலன் : 12 டிசம்பர் 2024 – Daily Horoscope இன்றைய ராசிபலன் 12.12.2024, குரோதி வருடம் கார்த்திகை 27, வியாழக் கிழமை, சந்திரன்...

17 11 17 11
ஜோதிடம்1 வாரம் ago

2025 இல் பண மழையில் நனையப்போகும் ராசிக்காரர்கள் : யார் தெரியுமா !

2025 இல் பண மழையில் நனையப்போகும் ராசிக்காரர்கள் : யார் தெரியுமா ! இன்னும் சில வாரங்களில் 2025 ஆம் ஆண்டில் நுழையவுள்ள நிலையில் ஒவ்வொருவரின் வாழ்க்கையும்...

tamilnaadi tamilnaadi
ஜோதிடம்2 வாரங்கள் ago

இன்றைய ராசி பலன் : 9 டிசம்பர் 2024 – Daily Horoscope

இன்றைய ராசி பலன் : 9 டிசம்பர் 2024 – Daily Horoscope இன்றைய ராசிபலன் 9.12.2024 குரோதி வருடம் கார்த்திகை 24, திங்கட் கிழமை, சந்திரன்...