2 14 1 scaled
உலகம்செய்திகள்

மாஸ்கோ மீது மீண்டும் ட்ரோன் தாக்குதல்:100 விமானங்களுக்கு ஏற்பட்ட நெருக்கடி

Share

மாஸ்கோ மீது மீண்டும் ட்ரோன் தாக்குதல்:100 விமானங்களுக்கு ஏற்பட்ட நெருக்கடி

ரஷ்ய தலைநகர் மாஸ்கோ மீண்டும் ட்ரோன் தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளது.

உக்ரைன் ரஷ்யா இடையிலான போர் 18 மாதங்களாக நடைபெற்று வரும் நிலையில் இரு நாடுகளின் வான் தாக்குதலும் சமீபத்தில் அதிகரித்து வருகிறது.

அதிலும் ரஷ்ய தலைநகர் மீதான உக்ரைனின் ட்ரோன் தாக்குதல் சமீபத்தில் நாட்களில் அதிகரித்த வண்ணம் உள்ளது.

இது தொடர்பாக உக்ரைனிய ஜனாதிபதி ஜெலென்ஸ்கி வெளியிட்ட கருத்தில், ரஷ்ய நிலப்பரப்பு மீதான தாக்குதல் போரில் தவிர்க்க முடியாதது என்று குறிப்பிட்டு இருந்தார்.

இந்நிலையில் ரஷ்ய தலைநகர் மாஸ்கோ மீது மீண்டும் ட்ரோன் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது, இதனால் கிட்டத்தட்ட 100 விமானங்கள் தாமதம் அடைந்துள்ளன.

இது தொடர்பாக மாஸ்கோ மேயர் தெரிவித்துள்ள தகவலில், நகரை நோக்கி வந்த உக்ரைனிய ட்ரோன்கள் சுட்டு வீழ்த்தப்பட்டுள்ளது, இதனால் 103 விமானங்கள் ரஷ்ய தலைநகரில் இருந்து வெளியேற முடியாமல் போனது.

வ்னுகோவோவில் இருந்து பிற புறப்பட வேண்டிய 34 விமானங்கள் இதனால் தாமதம் ஆனதுடன், 3 விமானங்கள் ரத்து செய்யப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதைப்போல  டொமோடெடோவோவில் 63 விமானங்கள், ஷெரெமெட்டியோவில் 6 விமானங்கள் தாமதமாகியுள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Share
தொடர்புடையது
05 3
செய்திகள்இலங்கைபிராந்தியம்

இந்தியாவிலிருந்து நாடு கடத்தப்பட்ட ‘பொடி லெசி’: விசாரணைகளுக்காக காலி குற்றத்தடுப்புப் பிரிவில் ஒப்படைப்பு!

இந்தியாவில் கைது செய்யப்பட்டு இன்று (பிப்ரவரி 27) அதிகாலை இலங்கைக்கு அழைத்து வரப்பட்ட பாரிய அளவிலான...

04 3
செய்திகள்விளையாட்டு

அபிஷேக் சர்மா வெறும் ‘ஸ்லோகர்’ அல்ல, யுவராஜ் சிங் போன்ற திறமையாளர்: முகமது அமீருக்கு அஸ்வின் பதிலடி!

இந்திய அணியின் இளம் அதிரடித் துடுப்பாட்ட வீரர் அபிஷேக் சர்மா தொடர்பாகப் பாகிஸ்தான் முன்னாள் வேகப்பந்து...

03 2
இந்தியாசெய்திகள்

உயிர்த்த ஞாயிறு குண்டுவெடிப்பு: சுரேஷ் சலே மீதான 5 முக்கிய குற்றச்சாட்டுகள் வெளியீடு – PTA-வின் கீழ் விசாரணை!

குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தால் (CID) கடந்த 25 ஆம் திகதி கைது செய்யப்பட்ட புலனாய்வுப் பிரிவின்...

02 2
செய்திகள்அரசியல்இலங்கை

இலங்கையில் பலகட்சி ஜனநாயகத்திற்கு ஆபத்து: ரணில் விக்ரமசிங்க அரசாங்கம் மீது கடும் குற்றச்சாட்டு!

இலங்கையில் பலகட்சி ஆட்சி முறையை அழித்து, ஜனநாயகத்திற்கு அச்சுறுத்தல் விடுக்க அரசாங்கம் நடவடிக்கைகள் எடுத்து வருவதாக...