இலங்கை
நாட்டில் எரிபொருள் தட்டுப்பாடு?- அதிர்ச்சி தகவல்!!
சபுகஸ்கந்த எண்ணெய் சுத்திகரிப்பு ஊழியர்கள் பணிப்பகிஷ்கரிப்பு போராட்டத்தை ஆரம்பித்துள்ளனர்.
எரிபொருள் விநியோகத்தை சனிக்கிழமைகளில் நிறுத்தும் தீர்மானத்துக்கு எதிர்ப்புத் தெரிவித்தே இப் போராட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பில் வணிக சேவை தொழிற்சாலை மற்றும் முற்போக்கு சேவை சங்கத்தின் தலைவர் பந்துல சமன் குமார் தெரிவிக்கையில்,
சபுகஸ்கந்த எரிபொருள் சுத்திகரிப்பு நிலையத்திலிருந்து சனிக்கிழமைகளில் எரிபொருள் விநியோகம் செய்வதை நிறுத்துவதற்கு நிலையத்தின் கட்டுப்பாட்டு அதிகாரிகள் தீர்மானித்துள்ளனர்.
நாட்டில் ஏற்பட்டுள்ள கொரோனாத் தொற்று பரவல் காரணமாக இத் தீர்மானம் எடுக்கப்பட்டாலும், இதனால் நாட்டில் எரிபொருள் தட்டுப்பாடு ஏற்படும் நிலைமை காணப்படுகிறது,
இத் தீர்மானத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து தொழிற்சங்கம் பணிப்பகிஷ்கரிப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறது.
நாட்டில் துறைமுகங்கள் உட்பட சில அத்தியாவசிய நிறுவனங்களுக்கு எரிபொருளை சேமித்து வைப்பதற்கு குறிப்பிட்டதொரு கொள்ளளவே காணப்படுகிறது,
வாராவாரம் சனிக்கிழமைகளில் எரிபொருள் விநியோகத்தை நிறுத்துவதன் மூலம் சனி மற்றும் ஞாயிறு ஆகிய இரண்டு தினங்கள் எரிபொருள் விநியோகிக்கப்படாமையால் பிரதி திங்கட்கிழமைகளில் நாட்டில் எரிபொருள் தட்டுப்பாடு ஏற்படும் நிலை உருவாகலாம்.
அவ்வாறானதொரு நிலைமை ஏற்பட்டால் அதன் பொறுப்பை அதிகாரிகளே ஏற்றுக்கொள்ள வேண்டும் – என்றார்.
You must be logged in to post a comment Login