உயிரிழந்த மனைவிக்கு போலி ஆவணங்கள்! 70 இலட்சம் சுருட்டிய அரச உத்தியோகஸ்தர்!
இலங்கைசெய்திகள்

உயிரிழந்த மனைவிக்கு போலி ஆவணங்கள்! 70 இலட்சம் சுருட்டிய அரச உத்தியோகஸ்தர்!

Share

உயிரிழந்த மனைவிக்கு போலி ஆவணங்கள்! 70 இலட்சம் சுருட்டிய அரச உத்தியோகஸ்தர்!

உயிரிழந்த பேராசிரியை ஒருவருக்கு உரித்தான சுமார் 70 இலட்சம் ரூபா பணத்தை போலி ஆவணங்களைத் தயாரித்து பல்கலைக்கழகத்தில் பணிபுரியும் அவரது கணவருக்கு வழங்கிய சம்பவம் ஒன்று கணக்காய்வாளர் நாயகம் அம்பலப்படுத்தியுள்ளார்.

பேராதனை பல்கலைக்கழக கலைப் பீடத்தில் பணியாற்றிய பேராசிரியையின் பணமே இவ்வாறு மோசடியால் பெறப்பட்டுள்ளது.

நேற்றையதினம் புதன்கிழமை (09) கணக்காய்வாளர் நாயகம் அந்த பல்கலைக்கழக நிர்வாகத்தை கோப் குழுவின் முன் அழைத்தபோது இது தெரிய வந்ததாகத் தெரிவிக்கப்படுகிறது.

2020ஆம் ஆண்டு இடம்பெற்ற இச்சம்பவம் போலி ஆவணங்கள் மூலம் மேற்கொள்ளப்பட்ட மோசடி எனத் தெரிவித்த கணக்காய்வாளர் நாயகம், இது தொடர்பில் இதுவரையில் ஏன் சட்டம் நடைமுறைப்படுத்தப்படவில்லை என பல்கலைக்கழக நிர்வாகத்திடம் கேள்வி எழுப்பியுள்ளார்.

அதேசமயம் பேராதனை பல்கலைக்கழகத்துக்கு அபகீர்த்தியை ஏற்படுத்தும் இவ்வாறான சம்பவங்களை நிறுத்துவதற்கு நிர்வாகம் உடனடியாக தலையிட வேண்டும் என கோப் குழு வலியுறுத்தியுள்ளது.

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
சரத் அபேகோன்n
இலங்கை

பதிவி ஏற்கும்போதே ஜனாதிபதியிடம் குறிப்பிட்டேன்.

மத்திய மாகாண ஆளுநர் பதவியிலிருந்து விலகுவதாகத் தெரிவித்து, ஜனாதிபதிக்குத் தான் அனுப்பிய கடிதத்திற்கு இதுவரை எந்தவொரு...

yositha 1
இலங்கை

ஒத்திவைக்கப்பட்டது யோஷிதவின் வழக்கு.

பணமோசடித் தடுப்புச் சட்டத்தின் கீழ் யோஷித ராஜபக்ஷவுக்கு எதிராகத் தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கு கொழும்பு மேல்...

arested 3
இலங்கை

வெளிநாட்டு குண்டுகளுடன் ஒருவர் கைது – கைப்பற்றப்பட்ட ஆயுத தொகுதி !

யக்கல பிரதேசத்தில் வைத்து, ராகமவைச் சேர்ந்த 42 வயதுடைய நபரொருவர் 2 கையெறி குண்டுகள் மற்றும்...

arrest warrant d
இலங்கை

முக்கிய நபர்கள் மீது பிறப்பிக்கப்பட்ட பிடியாணை உத்தரவு.

நகர அபிவிருத்தி பிரதி அமைச்சர் எரங்க குணசேகர மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் ஜகத் மனுவர்ண உள்ளிட்ட...