தங்கத்திற்காக கொலை செய்யப்பட்ட ஸ்ரீலங்கன் விமான சேவை ஊழியர்
இலங்கைசெய்திகள்

தங்கத்திற்காக கொலை செய்யப்பட்ட ஸ்ரீலங்கன் விமான சேவை ஊழியர்

Share

தங்கத்திற்காக கொலை செய்யப்பட்ட ஸ்ரீலங்கன் விமான சேவை ஊழியர்

கொட்டுகுடா பகுதியில் உள்ள இரண்டு மாடி வீடொன்றில் நபர் ஒருவர் படுகொலை செய்யப்பட்டுள்ளார்.

தங்க நகைகளை திருடும் நோக்கில் வீட்டுக்குள் புகுந்த நபரே இந்த கொலை செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

குறித்த வீட்டில் வசித்து வந்த ஸ்ரீலங்கன் விமான சேவையின் போக்குவரத்து திணைக்கள பணிப்பாளர் ஒருவரை கொலை செய்யப்பட்டுள்ளார்..

கத்தியால் குத்தப்பட்டு பலத்த காயமடைந்த அவர், கம்பஹா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் உயிரிழந்துள்ளதாக மினுவாங்கொடை பொலிஸார் தெரிவித்தனர்.

61 வயதான கே.அனுர இந்திரகுமார பெர்னாண்டோ என்பவரே இவ்வாறு கொலை செய்யப்பட்டுள்ளார். அனுர மூன்று பெண் பிள்ளைகளின் தந்தையாவார்.

சம்பவத்தன்று அனுரவின் மனைவியும் மூன்று மகள்களும் தேவாலயம் சென்றிருந்ததாகவும் வீட்டு பணியாளர்களும் அனுரவும் மட்டுமே வீட்டில் இருந்ததாகவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

யாரோ ஒருவர் மேல் தளத்திற்குள் புகுந்து பணிப்பெண்ணை கட்டி வைத்துவிட்டு, அவர் அணிந்திருந்த தங்க நகைகளையும் திருடியதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கீழ் மாடியில் தொலைக்காட்சி பார்த்துக் கொண்டிருந்த அனுரவை கத்தியால் குத்தி பலத்த காயம் ஏற்படுத்திய நபர், அவர் அணிந்திருந்த பெறுமதியாக தங்க நகைகளை கொள்ளையடித்துக் கொண்டு தப்பிச் சென்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இத்தகவல் அனுரவின் வீட்டில் இருந்த வீட்டுப் பணிப்பெண் மூலம் பொலிஸாருக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
world 180
செய்திகள்உலகம்

உலக நிதிச் சந்தைகளுக்கு எச்சரிக்கை: மத்திய கிழக்கு போரினால் அதிகரிக்கும் அபாயங்கள்!

மத்திய கிழக்கில் நிலவும் போர்ச் சூழல், உலகளாவிய நிதி நிலைத்தன்மைக்கு (Global Financial Stability) முன்னெப்போதும்...

world 179
செய்திகள்இலங்கைபிராந்தியம்

வெல்லவாயவில் பயங்கரம்: காதலனால் இளம் பெண் வெட்டிக்கொலை!

வெல்லவாய, நெட்டோலகம பகுதியில் 32 வயதுடைய திருமணமான பெண் ஒருவர் கூர்மையான ஆயுதத்தால் தாக்கப்பட்டு கொடூரமான...

world 178
செய்திகள்இலங்கைபிராந்தியம்

இலங்கையில் பாதுகாக்கப்பட்ட 238 ஈரானியர்கள் தாயகம் திரும்பினர்: விசேட விமானம் மூலம் ஈரானுக்குப் பயணம்!

இலங்கை கடற்பரப்பில் அண்மையில் தாக்குதலுக்கு உள்ளான கப்பல்களில் இருந்து மீட்கப்பட்டு, இலங்கையின் பாதுகாப்பில் வைக்கப்பட்டிருந்த மொத்தம்...

world 177
செய்திகள்உலகம்

போப்பின் விமர்சனங்களுக்கு ஜே.டி. வேன்ஸ் பதிலடி: இறையியல் விவகாரங்களில் போப் கவனமாக இருக்க வேண்டும்

அமெரிக்காவின் வெளியுறவுக் கொள்கை மற்றும் போர் நடவடிக்கைகள் குறித்து போப் லியோ XIV (Pope Leo...