யாழில் பாடசாலை மாணவிக்கு ஆசிரியரால் நேர்ந்த கொடூரம்!
இலங்கைசெய்திகள்பிராந்தியம்

யாழில் பாடசாலை மாணவிக்கு ஆசிரியரால் நேர்ந்த கொடூரம்!

Share

யாழில் பாடசாலை மாணவிக்கு ஆசிரியரால் நேர்ந்த கொடூரம்!

யாழ்ப்பாணம் – அனலைதீவு பகுதியில் உள்ள பாடசாலை ஒன்றில் கல்வி கற்கும் 13 வயது மாணவியிடம் ஆசிரியர் ஒருவரால் பாலியல் தொல்லையில் ஈடுபட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.

இச் சம்பவம் கடந்த ஜூலை 31ஆம் திகதி இடம்பெற்றுள்ளது.

இது தொடர்பில் அந்த மாணவியால் பாடசாலை நிர்வாகத்திற்கு முறைப்பாடு செய்யப்பட்ட நிலையில், இதனை அந்த பாடசாலையின் நிர்வாகத்தினர் வெளியே தெரியாமல் மூடி மறைப்பதற்கு முயற்சித்துள்ளனர்.

இவ்வாறான நிலையில் இது தொடர்பில் ஐக்கிய மக்கள் சக்தியின் ஊர்காவற்துறை மற்றும் வட்டுக்கோட்டை தேர்தல் தொகுதி அமைப்பாளர் சதாசிவத்திற்கு தெரியப்படுத்தப்பட்டது.

அதனடிப்படையில் சதாசிவம் வழங்கப்பட்ட ஆலோசனைக்கமைவாக ஊர்காவற்துறை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டது.

இதனையடுத்து நேற்று முன்தினம் (04-08-2023) அந்த ஆசிரியரை ஊர்காவற்துறை பொலிஸார் கைது செய்து, நேற்றையதினம் ஊர்காவற்துறை நீதிமன்றத்தில் முற்படுத்திய போது குறித்த ஆசிரியருக்கு பிணையில் செல்வதற்கு நீதிவான் அனுமதி அளித்துள்ளது.

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
Arrested With
இலங்கை

கைது செய்யப்பட்ட ஐக்கிய மக்கள் சக்தியின் பிரதேச சபை உறுப்பினர்.

ஐக்கிய மக்கள் சக்தியின் அம்பலங்கொட பிரதேச சபை உறுப்பினர் ஒருவர் காலி மாவட்ட குற்றப்பிரிவினரால் கைது...

Weapons
இலங்கை

சிறைச்சாலைக்குள் கைப்பற்றப்பட்ட ஆயுதங்கள் – தாக்குதலுக்கு பயன்படுத்தப்பட்ட தேங்காய்கள்.

நீர்கொழும்பு சிறையில் நடந்த மோதலின் போது கைதிகள் அதிகாரிகளைத் தாக்கப் பயன்படுத்தியதாகக் கூறப்படும் கூர்மையான ஆயுதங்களின்...

ravi karunanayake cry 1
இலங்கை

ரவி கருணநாயக்கவிற்கு விடுக்கப்பட்டுள்ள அழைப்பாணை.

  இலஞ்சம் ஊழல் விசாரணை ஆணைக்குழுவில் இம் மாதம் 17ஆம் திகதி முன்னிலையாகுமாறு, கொழும்பு மாவட்ட...

penson
இலங்கை

வெளிநாடுகளில் பணியாற்றும் இலங்கையர்களுக்கு மகிழ்ச்சி தகவல்.

  வெளிநாடுகளில் பணிபுரியும் இலங்கையர்களுக்காக புதிய ஓய்வூதியத் திட்டத்தை விரைவாகத் தயாரிக்க நடவடிக்கை எடுத்து வருவதாக...