sivakarthikeyan 147806179110
சினிமாபொழுதுபோக்கு

மாஸாக ‘பீஸ்ட்’ பாடல்கள் – விஜய் + சிவகார்த்திகேயன் + தனுஷ்+ அனிருத்

Share

சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் தளபதி விஜய் நடித்து வரும் ‘பீஸ்ட்’ படத்தின் படிப்பிடிப்பு தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றது.

தளபதி ரசிகர்களின் ‘பீஸ்ட்’ பட எதிர்பார்ப்பை பூர்த்திசெய்யும் வகையில் தற்போது படக்குழு படத்தின் பாடல்கள் பற்றிய புதிய தகவல்களை வெளியிட்டு உற்சாகப்படுத்தியுள்ளது.

இந்தப் படத்தில் மொத்தமாக 4 பாடல்கள் மற்றும் இரண்டு தீம் டிராக்குகள் உள்ளன. இவற்றில் இரண்டு பாடல்கள் படமாக்கப்பட்டு விட்டன என தகவல்கள் வெளியாகியுள்ளன.

மேலும் இந்தப் படத்தில் உள்ள இரண்டு பாடல்களில் ஒன்றை தனுஷ் எழுதி அவரே பாட உள்ளார் என அண்மையில் தகவல்கள் வெளிவந்தன.

இந்த நிலையில் படத்தின் இன்னொரு பாடல் தொடர்பில் மாஸ் தகவல் கசிந்துள்ளது, இப் பாடலை சிவகார்த்திகேயன் எழுத விஜய் பாடவுள்ளார் எனக் கூறப்படுகிறது.

அனிருத் இசையமைக்கும் இந்தப் படத்தின் பாடல்கள் அனைத்தும் மாஸாக இருக்கும் என ரசிகர்களால் எதிர்பார்க்கப்படுகிறது.

நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவாகி வரும் இப் படத்தில் விஜய்க்கு ஜோடியாக பூஜா ஹெக்டே நடிக்கின்றார். அத்துடன் படத்தில்  செல்வராகவன், யோகிபாபு, ஷைன் டாம் சாக்கோ, விடிவி கணேஷ், அபர்ணா தாஸ் உள்ளிட்ட பலர் நடித்து வருகின்றனர்.

படம் பொங்கலை முன்னிட்டு வெளியாகவுள்ள நிலையில் ரசிகர்களுக்கு பொங்கல் விருந்து காத்திருக்கிறது என எதிர்பார்க்கப்படுகிறது.

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
Untitled 37
பொழுதுபோக்குசினிமா

திருமண பந்தத்தில் இணைந்தார் நடிகை ஜனனி: துபாய் விமானியை கரம் பிடித்த ‘தெகிடி’ நாயகி!

பிரபல தமிழ் மற்றும் மலையாளத் திரைப்பட நடிகை ஜனனி, தனது நீண்ட நாள் காதலரான சாய்...

Untitled 28
பொழுதுபோக்குசினிமா

மீண்டு வரும் “இயக்குநர் இமயம்”: பாரதிராஜாவின் தற்போதைய நிலை குறித்து மருத்துவர்கள் உற்சாக தகவல்!

தமிழ் சினிமாவின் அடையாளமாகத் திகழும் மூத்த இயக்குநர் பாரதிராஜா, கடந்த சில மாதங்களாகத் தீவிர உடல்நலக்...

Untitled 27
சினிமாபொழுதுபோக்கு

விஜய்யின் சொத்து விவரங்கள்: மனைவி சங்கீதாவின் சொத்துகள் மற்றும் முரண்பாடுகள் குறித்த அரசியல் விவாதம்!

தமிழக சட்டமன்றத் தேர்தலுக்காக பெரம்பூர் தொகுதியில் வேட்புமனுத் தாக்கல் செய்துள்ள தமிழக வெற்றிக் கழகத் தலைவர்...

Untitled 26
பொழுதுபோக்குசினிமா

விஜய் எனது தம்பி; ஆனால் போட்டி திமுக – அதிமுக இடையேதான்: சுந்தர் சி பேச்சு!

தமிழக சட்டமன்றத் தேர்தல் நெருங்கி வரும் வேளையில், தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் தனது...