காணாமல் போன மற்றுமொரு தமிழ் தாய் குழந்தை
இலங்கைசெய்திகள்

காணாமல் போன மற்றுமொரு தமிழ் தாய் குழந்தை

Share

காணாமல் போன மற்றுமொரு தமிழ் தாய் குழந்தை

ஹேவாஹெட்ட, ரஹதுங்கொட, ரிவர்டேல் பகுதியில் கடந்த 17 நாட்களாக தாயும் சிறு குழந்தையும் காணாமல் போயுள்ள நிலையில் தொடர்ந்து தேடி வருவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இந்த சம்பவம் தொடர்பில் அவரது கணவர் ஹகுரன்கெத்த பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளார்.

22 இரண்டு வயதான வெள்ளையம்மா சுரேந்திரனி ராணி மற்றும் அவரது ஒரு வயது ஏழு மாத மகள் தருஷிகா அபி ஆகியோரே காணாமல் போயுள்ளனர்.

கடந்த 17ஆம் திகதி சுகயீனத்திற்கு சிகிச்சை பெறுவதற்காக ரிக்கிலகஸ்கட வைத்தியசாலைக்கு தனது குழந்தையுடன் சென்றவர் இது வரை வீடு திரும்பவில்லை என அவரது கணவர் மோகனசுந்தரம் சம்பத் குமார் தெரிவித்துள்ளார்.

கடந்த 17ஆம் திகதி பேருந்தில் ரிக்கிலகஸ்கட நகருக்குச் சென்றதாகவும், ஊரில் அவர்களை பார்த்ததாகவும் பலர் தன்னிடம் கூறியதாகவும் கணவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்த நிலையில் அந்த பெண் மற்றும் குழந்தையை தொடர்ந்து தேடி வருவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
dead body
இலங்கை

பாடசாலை செல்லும்போது ஆறு வயது பாலகிக்கு நேர்ந்த கதி.

இன்று, மாத்தறை, திக்வெல்ல – கொடஉட பகுதியில் 6 வயது சிறுமி ஒருவர் தனது தாயார்...

Lanka Turkey
இலங்கை

துருக்கித் தூதுவரை சந்தித்த சர்வஜன அதிகாரம் கட்சியின் தலைவர்.

சர்வஜன அதிகாரம் கட்சியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினர் திலித் ஜயவீர மற்றும் சர்வஜன அதிகார கட்சியின்...

Fire Breaks Out Factory In Katuwana
இலங்கை

அடையாளம் காணப்பட முடியாத வகையில் உடலங்கள் – ஹோமாகம, கட்டுவான கைத்தொழில் வலயத்தில் தீ.

ஹோமாகம, கட்டுவான கைத்தொழில் வலயத்தில் அமைந்துள்ள தலைக்கவசம் தயாரிக்கும் தொழிற்சாலையில் ஏற்பட்ட தீ விபத்தில் உயிரிழந்தவர்கள்...

Basil Rajapaksa
இலங்கை

கடும் எச்சரிக்கையுடன் பசில் ராஜபக்சவுக்கு மீண்டும் பிறப்பிக்கப்பட்ட பிடியாணை.

முன்னாள் பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்சவுக்கு எதிராக, மாத்தறை எளியகந்த பகுதியில் உள்ள ஒன்றரை...