இலங்கையில் உயிரிழந்த ஐரோப்பிய பெண் - சடலத்தை காண வந்த தோழி
இலங்கைசெய்திகள்

இலங்கையில் உயிரிழந்த ஐரோப்பிய பெண் – சடலத்தை காண வந்த தோழி

Share

இலங்கையில் உயிரிழந்த ஐரோப்பிய பெண் – சடலத்தை காண வந்த தோழி

இலங்கையில் மலை உச்சியில் இருந்து தவறி விழுந்து உயிரிழந்ததாகக் கூறப்படும் 32 வயதுடைய டென்மார்க் பெண்ணின் சடலத்தை அடையாளம் காண அவரது தோழி ஒருவர் இலங்கை வந்துள்ளார்.

சடலத்தை அடையாளம் காண்பதற்காக அவரது தோழி தூதரக அதிகாரிகளுடன் கண்டிக்கு பயணிக்கவுள்ளார். அதற்கமைய, இன்று அவரது உடலை பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைக்க முடியும் என பொலிஸார் நம்பிக்கை வெளியிட்டுள்ளனர்.

டென்மார் பெண்ணின் உடல் மலை அடிவாரத்தில் கண்டெடுக்கப்பட்ட போது, ​​அது உடல் அழுகிய நிலையில் காணப்பட்டது. அவரது உடல் கடந்த 14ஆம் திகதி வனப்பகுதியில் மலை அடிவாரத்தில் கிடந்த நிலையில் கண்டெடுக்கப்பட்டது.

குறித்த பெண் கண்டி ஹோட்டலில் இருந்து மலையேறுவதற்காக சென்ற போது, ​​கடந்த 10ஆம் திகதி இந்த மரணம் இடம்பெற்றிருக்கலாம் என சந்தேகிக்கப்படுவதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

இப்பிரதேசத்தில் நிலவும் குளிர் காலநிலை காரணமாக உடல் விரைவாக சிதைவடையவில்லை எனவும் பொலிஸார் குறிப்பிடுகின்றனர்.

உடலை பிரேத பரிசோதனைக்கு அனுப்பிய பிறகே அவரது இறப்புக்கான காரணம் தெரியவரும். அவரது மரணம் குறித்து, இந்தியாவில் உள்ள டென்மார்க் தூதரகம் மூலம் அவரது உறவினர்களுக்கு தகவல் தெரிவிக்க வெளியுறவு அமைச்சகம் நடவடிக்கை எடுத்துள்ளது.

மலையேறுவதில் அதிக ஆர்வம் கொண்டிருந்ததாகக் கூறப்படும் டென்மார்க் பெண்ணின் சடலம் தற்போது கண்டி தேசிய வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது.

சடலம் கண்டெடுக்கப்பட்ட போது, 20 டொலர் தாள்கள் ஐந்தும், இரண்டு 05 டொலர் தாள்கள் மற்றும் 62000 இலங்கை நாணயங்கள் காணப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர். அவரது கையடக்க தொலைபேசி இன்னும் கிடைக்கவில்லை என தெரிவிக்கப்படுகின்றது.

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
world 231
செய்திகள்உலகம்

ஹோர்முஸ் நீரிணையை இனி மூடப்போவதில்லை: ஈரானின் உறுதிமொழியை அறிவித்தார் டொனால்ட் டிரம்ப்!

சர்வதேச எரிசக்தி விநியோகத்தின் உயிர்நாடியாக விளங்கும் ஹோர்முஸ் நீரிணையை (Strait of Hormuz) இனிவரும் காலங்களில்...

world 230
செய்திகள்இலங்கைபிராந்தியம்

நாய்கள் அச்சப்படுவதாகக் கூறி பட்டாசு கொளுத்த வேண்டாமெனக் கேட்ட பெண் மீது தாக்குதல்: ஒருவர் கைது!

மொரகஹஹேன பகுதியில் பட்டாசு கொளுத்துவதை நிறுத்துமாறு கோரிய பெண் ஒருவர் மீது, அவரது அண்டை வீட்டார்...

world 229
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பெட்ரோல் வாகனங்களுக்கு மீண்டும் QR முறை: தற்காலிக சலுகை இன்று நள்ளிரவுடன் நிறைவு!

சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு பண்டிகைக் காலத்தை முன்னிட்டு பெட்ரோல் வாகனங்களுக்கு வழங்கப்பட்டிருந்த தற்காலிக கியூ.ஆர்...

world 228
செய்திகள்உலகம்

ரஷ்ய எண்ணெய் மீதான தடை விலக்கை மேலும் ஒரு மாதம் நீடித்தது அமெரிக்கா!

சர்வதேச எரிசக்தி சந்தையில் நிலவும் கடும் விலை ஏற்றம் மற்றும் விநியோகத் தட்டுப்பாடுகளைக் கருத்திற்கொண்டு, ரஷ்யாவின்...