ரணிலுக்கு மீண்டும் ஆதரவுக் கரம்!!!
இலங்கைசெய்திகள்

தமிழ் தரப்புகளை சந்திக்கும் ரணில்

Share

தமிழ் தரப்புகளை சந்திக்கும் ரணில்

இலங்கைத் தமிழரசுக் கட்சியின் சிரேஷ்ட தலைவர் இரா.சம்பந்தன் தலைமையிலான குழுவினர் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவை சந்திக்கவுள்ளனர்.

நாளை மறுதினம் (18.07.2023) இடம்பெறவுள்ள இந்த சந்திப்பில் அர்த்தமுள்ள அதிகாரப்பகிர்வை வழங்குமாறும், குருந்தூர்மலை விவகாரம் மற்றும் நில ஆக்கிரமிப்புக்கள் தொடர்பாகவும் ஜனாதிபதியிடம் வலியுறுத்தவுள்ளனர்.

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க எதிர்வரும் 20 ஆம் திகதி உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டு இந்தியா செல்லவுள்ள நிலையில், தமிழர் விவகாரத்தில் ஜனாதிபதியிடம் இந்தியப்பிரதமர் நரேந்திர மோடி எவ்விடயங்களை வலியுறுத்தவேண்டும் என்பது குறித்து தமிழ்த்தேசிய கட்சிகள் கடிதங்களை அனுப்பிவைத்திருப்பதுடன், இந்திய உயர்ஸ்தானிகரிடம் தமது நிலைப்பாடுகளை நேரடியாகவும் அறிவித்துள்ளன.

அதன்படி, ஜனாதிபதியிடம் சமஷ்டி முறையிலான தீர்வையே இந்தியா வலியுறுத்தவேண்டுமென கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தலைமையிலான தமிழ் மக்கள் தேசிய கூட்டணியும், அரசியலமைப்புக்கான 13ஆவது திருத்தத்தை முழுமையாக நடைமுறைப்படுத்துமாறு வலியுறுத்தவேண்டுமென ஜனநாயக தமிழ்த்தேசியக் கூட்டமைப்பும் தனித்தனியாக இந்திய உயர்ஸ்தானிகரிடம் கடிதங்களைக் கையளித்துள்ளன.

மேலும், ஜனநாயக தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் கடிதத்தில் கையெழுத்திடாத இலங்கைத் தமிழரசுக்கட்சி, அர்த்தமுள்ள அதிகாரப்பகிர்வை நடைமுறைப்படுத்துமாறு இந்தியப்பிரதமர் மோடி ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிடம் அழுத்தம் பிரயோகிக்கவேண்டுமென வலியுறுத்தியுள்ளது.

இலங்கைத் தமிழரசுக்கட்சியின் சிரேஷ்ட தலைவர் இரா.சம்பந்தனுக்கும் இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் கோபால் பாக்லேவுக்கும் இடையில் கடந்த புதன்கிழமை இடம்பெற்ற சந்திப்பின்போதே மேற்குறிப்பிட்டவாறு வலியுறுத்தப்பட்டுள்ளது.

இந்த நிலையில், ஜனாதிபதியின் இந்திய விஜயத்துக்கு முன்பதாக இலங்கைத் தமிழரசுக்கட்சியின் சிரேஷ்ட தலைவர் இரா.சம்பந்தனுக்கும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கும் இடையிலான சந்திப்பு இவ்வாரம் நடைபெறவுள்ளது.

இச்சந்திப்பு நாளை மறுதினம் பி.ப 3 மணிக்கு நாடாளுமன்றத்தில் நடைபெறவிருக்கும் இச்சந்திப்புக்கு ஜனாதிபதியே அழைப்புவிடுத்திருப்பதாக தமிழரசுக்கட்சியின் பேச்சாளர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
அருந்திக பெர்னாண்டோ
இலங்கை

CCIB இல் இருந்து வெளியேறினார் முன்னாள் அமைச்சர்.

முன்னாள் இராஜாங்க அமைச்சர் அருந்திக பெர்னாண்டோ மத்திய குற்றப் புலனாய்வுப் பணியகத்தில் முன்னிலையாகி இருந்தார். டுபாயிலிருந்து...

மேயர் எராஜ் ரவீந்திர பெர்னாண்டோ
இலங்கை

ராஜபக்சர்களின் மற்றுமொரு சகா உயிரிழப்பு – நீளும் மர்மங்கள்!

  நேற்றைய தினம், ராஜபக்சர்களின் மிகவும் நெருக்கமான அரசியல்வாதி ஒருவர் மர்மமான முறையில் உயிரிழந்தமை தொடர்பில்...

Namal
இலங்கை

மீண்டும் உருவாகும் ராஜபக்சர்கள் யுகம் – பொதுவெளியில் முழங்கிய இந்திக அனுருத்த!

  ராஜபக்சர்கள் தலைமையிலான அரசாங்கத்தை மீண்டும் தோற்றுவிக்க இலங்கை மக்கள் தயாராகியுள்ளதாக பொதுஜன பெரமுன கட்சியின்...

இலங்கைக்கு கொண்டு வரப்படவுள்ள 50 இற்கும் மேற்பட்ட ஆபத்தான நபர்கள் திணறும் அரசியல்வாதிகள்
இலங்கை

இலங்கைக்கு கொண்டு வரப்படவுள்ள 50 இற்கும் மேற்பட்ட ஆபத்தான நபர்கள் – திணறும் அரசியல்வாதிகள்.

  வெளிநாடுகளில் தலைமறைவாக உள்ள, சர்வதேச சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்ட 73 சக்திவாய்ந்த பாதாள உலகக்...