நாட்டில் கொரோனா வைரஸ் தொற்றைக் கட்டுப்படுத்துவது சுலபம் என அறுவை சிகிச்சை நிபுணர் கோசல சோமரத்ன தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,
மக்கள் முகக்கவசம் அணிதல் உட்பட உரிய சுகாதார வழிகாட்டுதல்களை பின்பற்றின் டெங்குவை விட கொரோனவை கட்டுப்படுவது சுலபம்.
கொரோனவைத் தொற்று பரவலை கட்டுப்படுத்துவது சுலபம், முகக்கவசம் அணிவது உட்பட சுகாதார நடவடிக்கைகளை பின்பற்றுவது கடினம் என மக்கள் நினைக்கிறார்கள், ஆனால் முகக்கவசத்தின் மீது அறுவை சிகிச்சை நிபுணர்கள் மிகப்பெரிய நம்பிக்கை கொண்டுள்ளனர்,
மக்கள் சுகாதார நடைமுறைகளை சரியாக பின்பற்றுவதுதான், முகக்கவசங்களை சரியானமுறையில் பயன்படுத்த வேண்டும், அவ்வாறு பயன்படுத்தினால் டெங்குத் தொற்றைக் கட்டுப்படுத்துவதை விட கொரோனாத் தொற்றை இலகுவில் கட்டுப்படுத்தி விடலாம் என்றார்.
Leave a comment