rtjy 59 scaled
இலங்கைசெய்திகள்

அரசின் செயற்பாடுகளுக்கு எதிராக 40 வழக்குகள்

Share

அரசின் செயற்பாடுகளுக்கு எதிராக 40 வழக்குகள்

அரசின் ஜனநாயக விரோத செயற்பாடுகளுக்கு எதிராக ஐக்கிய மக்கள் சக்தி இதுவரையும் போராடி வருகின்றது என அக்கட்சியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் தெரிவித்துள்ளார்.

ஐக்கிய மக்கள் சக்தி இதுவரை 40 இற்கு மேற்பட்ட வழக்குகளைத் தாக்கல் செய்துள்ளது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

அவர் மேலும் குறிப்பிடுகையில், கோட்டாபய ராஜபக்ச ஜனாதிபதியானது முதல் இன்றுவரை மக்கள் சொல்லொண்ணாத் துன்பங்களை அனுபவித்து வருகின்றனர்.

அவர் பதவியை விட்டோடி அடுத்தவர் அவரது இடத்துக்கு வந்த போதிலும் பெரிய மாற்றம் ஒன்றும் இடம்பெற்று விடவில்லை. புதிதாக வறுமையால் 40 இலட்சம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இது மிகவும் பாரதூரமான நிலைமை. மூன்று வேளை சாப்பிட்டவர்கள் அதை இரண்டு வேளையாக மாற்றியுள்ளனர். இரண்டு வேளை உண்டவர்கள் ஒரு வேளையாக மாற்றியுள்ளனர்.

இந்த நிலைமை மோசமடையுமே தவிர பிரச்சினை தீர்வதற்கு வழியில்லை. அரசு உண்மையான பிரச்சினைகளைத் தீர்ப்பதை விட்டுவிட்டு தேவையற்ற வேலைகளைச் செய்துகொண்டிருக்கின்றது.

அரசின் இவ்வாறான செயற்பாடுகளுக்கு எதிராக நாம் போராடி வருகின்றோம்.

இதுவரை 40 இற்கு மேற்பட்ட வழக்குகளைத் தாக்கல் செய்திருக்கின்றோம். நாம் தொடர்ந்தும் மக்களின் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்காகப் போராடுவோம் என தெரிவித்துள்ளார்.

Share

1 Comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
Elephant Tusks 1
இலங்கை

யானைத்தந்தங்களுடன் நிலவெளியில் ஒருவர் கைது.

  சட்டவிரோதமான முறையில் யானைத் தந்தங்களை வீட்டில் வைத்திருந்த நபரொருவர் திருகோணமலை- நிலாவெளி பகுதியில் விசேட...

low r 1
இலங்கை

உயர்தர பரீட்சையை ஒத்தி வைக்க கோரிய மனு மீதான உத்தரவு.

எதிர்வரும் நாட்களில் நடைபெறவுள்ள கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சையை ஒத்திவைத்து உத்தரவிடுமாறு கல்விப் பொதுத்...

are 2 1
இலங்கை

அயலவரை அடித்துக்கொன்ற சந்தேக நபர் கைது.

கடந்த 14ஆம் திகதி இரவு தம்புள்ளை விகாரை சந்தியில் அமைந்துள்ள கடை அறைகளில் தற்காலிகமாக வசித்து...

யோஷித ராஜபக்ஷ
இலங்கை

யோஷித ராஜபக்ஷவிற்கு எதிரான வழக்கு நீதிமன்று பிறப்பித்துள்ள உத்தரவு.

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் புதல்வர் யோஷித ராஜபக்ஷ மற்றும் அவரது பாட்டியான டெய்ஸி ஃபொரஸ்ட்...