tamilni 113 scaled
இலங்கைசெய்திகள்

மின்சார நிலைய பாதுகாப்பு உத்தியோகஸ்தர் மீது தாக்குதல் – யாழில் சம்பவம்

Share

மின்சார நிலைய பாதுகாப்பு உத்தியோகஸ்தர் மீது தாக்குதல் – யாழில் சம்பவம்

இலங்கை மின்சார சபையிடம் இருந்து சிவப்பு அறிவித்தல் (ரெட் நோட்டீஸ்) வந்தமையால் மின்சார நிலைய சேவை நிலையத்திற்கு சென்ற நபர் பாதுகாப்பு உத்தியோகஸ்தர் ஒருவர் மீது தாக்குதல் நடாத்தியுள்ளார்.

தாக்குதலில் பாதுகாப்பு உத்தியோகஸ்தர் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

யாழ்ப்பாணம் வட்டுக்கோட்டை பகுதியை சேர்ந்த நபர் ஒருவர் மின்சார கட்டணம் செலுத்தாத நிலையில், கட்டணம் செலுத்துமாறு கோரி , மின்சார சபையிடம் இருந்து சிவப்பு அறிவித்தல் அனுப்பப்பட்டது.

அதனை அடுத்து அவர் நேற்றைய தினம் வியாழக்கிழமை (06) தனக்கு அனுப்பப்பட்ட சிவப்பு அறிவித்தல் தொடர்பில் , வட்டுக்கோட்டையில் உள்ள மின்சார சபையின் சேவை நிலையத்திற்கு சென்று அங்கிருந்த மின்சார சபை ஊழியர்களுடன் முரண்பட்டுள்ளார்.

அதன் போது , அங்கு பாதுகாப்பு கடமையில் இருந்த பாதுகாப்பு உத்தியோகஸ்தர் அவரை வெளியேற்ற முற்பட்ட வேளை , பாதுகாப்பு உத்தியோகஸ்தர் மீது தாக்குதல் நடாத்தி விட்டு அங்கிருந்து தப்பி சென்றுள்ளார்.

சம்பவம் தொடர்பில் வட்டுக்கோட்டை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ள நிலையில் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
gold price growth
இலங்கை

இன்றைய நாளில் உயர்வினை பதிவு செய்த தங்கத்தின் விலை.

இலங்கையில் தங்கத்தின் விலை இன்று அதிகரிப்பை பதிவு செய்துள்ளதாக அகில இலங்கை நகையக வியாபாரிகள் சங்கம்...

sajith premadasa
இலங்கை

எதிர்க்கட்சித் தலைவர் கொண்டுவந்துள்ள நம்பிக்கையில்லா தீர்மானம்.

எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச உள்ளிட்ட எதிர்க்கட்சி பாராளுமன்ற உறுப்பினர்கள், இன்று பாராளுமன்றத்தில் வைத்து நம்பிக்கையில்லாத்...

Suresh Salley
இலங்கை

மீண்டும் விசாரணைக்கு வந்த சுரேஷ் சலே வழக்கு.

உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல்கள் தொடர்பான விசாரணைகளுக்காக , பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது...

body
இலங்கை

இரத்தினபுரியில் மீட்கப்பட்ட இளம்பெண்ணின் சடலம்!

  இரத்தினபுரி , கொடிகமுவவில் பகுதியில் தனியாக வசித்து வந்த 32 வயதான கமகே நிசான்ச...