வங்கிகளில் வைப்பிலிட்டுள்ளவர்களுக்கு ஆபத்தா..!
இலங்கைசெய்திகள்

வங்கிகளில் வைப்பிலிட்டுள்ளவர்களுக்கு ஆபத்தா..!

Share

வங்கிகளில் வைப்பிலிட்டுள்ளவர்களுக்கு ஆபத்தா..!

வங்கிகளில் வைப்பிலிடப்பட்டுள்ள பணம் பாதுகாப்பானது இல்லை என்ற கரிசனை அர்த்தமற்றது. வைப்புகள் எப்போதும் பாதுகாப்பானவை. அரசாங்கம் ஒழுங்குபடுத்தும் செயற்பாடுகளை மீறினால் மாத்திரமே அவற்றிற்கு ஆபத்து ஏற்படும் என பொருளாதார நிபுணர் கலாநிதி நிசான் டி மெல் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் மேலும் குறிப்பிடுகையில்,

உள்நாட்டு கடன்மறுசீரமைப்பு நடவடிக்கைகளின் போது வங்கியில் வைப்பிலிடப்பட்டுள்ள பணத்திற்கு என்ன நடக்குமோ என்ற அச்சம் தேவையற்றது.

வங்கியில் உள்ளவைப்புகளிற்கு பாதிப்பு என்ற அச்சத்திற்கு தீர்வை காணவேண்டும். வங்கியின் வாடிக்கையாளர்கள் மத்தியில் பதற்றநிலை ஏற்பட்டு மக்கள் தங்கள் பணத்தை மீளபெற்றுக்கொள்ள முயலும் சூழ்நிலை உருவாக அனுமதிக்க கூடாது.

அவ்வாறான பதற்றநிலையேற்பட்டால் அது வங்கிகளை பாதிக்கும். அவ்வேளையே வங்கிகள் வீழ்ச்சியடையும். அவ்வாறான அதிர்ச்சி சூழ்நிலை உருவாகும்போது வங்கிகளுக்கு ஏற்படக்கூடிய பாதிப்பை எவராலும் தடுக்க முடியாது.

வாடிக்கையாளர்கள் தங்கள் பணத்தை உடனடியாக பெற்றுக்கொள்ள முயல்வார்கள். அந்த நிலைமையை கையாள்வது கடினம். அவ்வாறான சூழ்நிலையை நாங்கள் உருவாக்காமலிருப்பது அவசியம். வங்கிகளில் வைப்பிலிடப்பட்டுள்ள பணம் பாதுகாப்பானது இல்லை என்ற கரிசனை அர்த்தமற்றது.

வைப்புகள் எப்போதும் பாதுகாப்பானவை அரசாங்கம் ஒழுங்குபடுத்தும் செயற்பாடுகளை மீறினால் மாத்திரமே அவற்றிற்கு ஆபத்து ஏற்படும் என தெரிவித்துள்ளார்.

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
Featuredgughik
இலங்கை

இலங்கைக்கு கொண்டு வரப்பட்டனர் முக்கிய பாதாள உலகக் குற்றவாளிகள்.

மலேசியாவில் கைது செய்யப்பட்ட முக்கிய பாதாள உலகக் குற்றவாளியான தனுஷ்க கௌசல்ய என்ற “ரத்மலானே சைமா”...

இஷாரா செவ்வந்தி
இலங்கை

விளக்கமறியலில் வைக்கப்பட்டார் இஷாரா செவ்வந்தி!

கணேமுல்ல சஞ்சீவ கொலைச் சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்டுத் தடுத்து வைக்கப்பட்ருந்த சந்தேக நபரான இஷாரா...

சுரேஷ் சலே 10
இலங்கை

சுரேஷ் சலேயினால் முன்வைக்கப்பட்ட மனு மீதான விசாரணைகள் இம்மாதம் ௨௫ ஆம் திகதி!

அரச புலனாய்வுப் பிரிவு சேவையின் முன்னாள் பணிப்பாளர் சுரேஷ் சலே யினால் உயிர்த்த ஞாயிறு பயங்கரவாத...

person calling the police
இலங்கை

தலைமறைவான கொலைக்குற்றவாளி – பொதுமக்களின் உதவியினை கோரிய காவல்துறை!

ராகம பொலிஸ் பிரிவிற்குட்பட்ட வல்பொல பகுதியில் பெண் ஒருவரைத் தாக்கிக் கொலை செய்த சம்பவம் தொடர்பில்...