625.500.560.350.160.300.053.800.900.160.90 95
செய்திகள்இலங்கை

ஏழு வகை பிளாஸ்டிக் பொருள்களுக்கு தடை- மஹிந்த அமரவீர!!

Share

நாட்டில் மேலும் 7 வகையான பிளாஸ்டிக் பொருள்களுக்கு தடை விதிக்கும் வர்த்தமானி அறிவிப்பை வெளியிடுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என சுற்றுச்சூழல் அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.

சுற்றுச்சூழல் அமைச்சில் நேற்று நடைபெற்ற வாராந்த ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

சட்டமா அதிபரின் பரிந்துரை கிடைத்தவுடன் வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்படும் என்றும் சுற்றுச்சூழல் அமைச்சர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

ஒரு தடவை மட்டும் பயன்படுத்திய பின்னர் அப்புறப்படுத்தும் மேலும் ஏழு பிளாஸ்டிக் பொருள்களின் உற்பத்தி மற்றும் விற்பனையை தடை செய்வதற்கு கடந்த வாரம் கூடிய அமைச்சரவை, அனுமதி வழங்கியுள்ளது.

இந்த நிலையில் பிளாஸ்டிக் ஸ்ரோ, முள்ளுக்கரண்டி, கரண்டி, பானக் கோப்பை, கத்தி, இடியப்பத் தட்டு பிளாஸ்டிக் மற்றும் பொலித்தீனால் செய்யப்பட்ட பூ மாலைகள் ஆகியவற்றுக்கே தடை விதிக்கும் வர்த்தமானி அறிவிப்பு வெளியாகவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
world 53
செய்திகள்இலங்கைபிராந்தியம்

வெல்லம்பிட்டியில் 4 கோடி ரூபா பெறுமதியான போதைப்பொருட்கள் மீட்பு: இருவர் கைது

கொழும்பு, வெல்லம்பிட்டி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதியில் பொலிஸ் போதைப்பொருள் தடுப்புப் பிரிவினர் (PNB) நேற்று (மே...

world 52
செய்திகள்இலங்கைபிராந்தியம்

கொழும்பில் பிடிபட்ட 74 வியட்நாமியர்களுக்கு மே 14 வரை விளக்கமறியல்: நீதிமன்றம் அதிரடி உத்தரவு

கொழும்பு, கொள்ளுப்பிட்டி பகுதியில் உள்ள உத்தராநந்த மாவத்தையில் அமைந்துள்ள குடியிருப்பு வளாகம் ஒன்றில் வைத்து, இணையவழி...

world 51
செய்திகள்இலங்கைபிராந்தியம்

ஊழலுக்கு எதிராகக் குரல் கொடுத்துப் பதவி விலகிய NPP உறுப்பினர்: ராஜினாமா கடிதம் கசிந்த விவகாரத்தில் சர்ச்சை

தேசிய மக்கள் சக்தி (NPP) கட்சியின் குருநாகல் மாநகர சபை உறுப்பினர் பி.டபிள்யூ. பிரேமச்சந்திரா, தனது...

world 50
செய்திகள்இலங்கைபிராந்தியம்

தோல் புற்றுநோய் அபாயம்: காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை அவதானம் தேவை

இலங்கையில் தோல் புற்றுநோயால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாகச் சுகாதார மேம்பாட்டுப் பணியகம் எச்சரிக்கை விடுத்துள்ளது....