astrology daily 7u567 1
ஜோதிடம்

இன்றைய ராசிபலன் (09.09.2021)

Share

Medam

medam

மனதில் ஏற்பட்ட குழப்பங்கள் நீங்கும். முக்கிய முடிவுகள் எடுப்பதை தவிருங்கள். உறவினர்களால் தேவையற்ற பிரச்சினைகள் ஏற்பட வாய்ப்பிருப்பதால் பொறுமையைக் கடைப்பிடியுங்கள். ஒரு சிலருக்கு எதிர்பாராத பணவரவு உண்டாகும். பணியாளர்கள் வேலையில் சிறந்து விளங்குவார்கள். தெய்வப் பணிகளில் நாட்டம் உண்டாகும். தேவையற்ற பிரச்சினைகளில் தலையிடாதீர்கள். பொறுமை காப்பது அவசியம்.

Edapam

edapamதேவையான பணம் கைக்கு வந்து சேரும். சிலருக்கு எதிர்பாரா வாய்ப்புக்கள் வரும். வாய்ப்புக்களை சரியான முறையில் பயன்படுத்தினால் வெற்றி நிச்சயம். உடல் ஆரோக்கியத்தில் அக்கறை செலுத்துதல் வேண்டும். அயலவர்களுடன் இணக்கமாக நடத்தல் வேண்டும். வியாபாரம் சுமாராக இருக்கும். முருகப்பெருமானை வழிபட நன்மைகள் உண்டாகும். எதிர்பார்த்த காரியம் அனுகூலமாகும். மகிழ்ச்சி உண்டாகும்.

Mithunam

mithunamகாரியங்கள் அனுலமாகும். முக்கிய முடிவுகளை எடுக்க உகந்த நாள் இன்றாகும். பிடிவாதப்போக்கை கைவிடுங்கள். பணியிடம் மறைமுக தொல்லைகள் நீங்கும். தொழிலில் அலட்சியம் வேண்டாம். குடும்ப உறவினர்களுடன் அனுசரித்து செல்லுதல் நன்று. வாழ்க்கைத்துணையால் மகிழ்ச்சி உண்டாகும். சகோதரர்களால் திடீர் செலவுகள் உண்டாக வாய்ப்புண்டு. அம்பிகை வழிபாடு நன்மை உண்டாகும்.

Kadakam

kadakamநினைத்ததை முடிக்கும் நாள். கணவன் மனைவிக்கிடையே சிறுசிறு விவாதங்கள் ஏற்பட்டு நீங்கும். பொறுமையைக் கடைப்பிடித்தல் அவசியம். தொழிலில் ஆதாயம் உண்டாகும். விற்பனை அதிகரிக்கும். புதிய முயற்சிகள் வெற்றியளிக்கும். கடன்கள் விடயத்தில் கவனமாக கையாள வேண்டும். எதிர்பாராத பணவரவு உண்டாகும். வெளிவட்டாரத்தில் அந்தஸ்து உண்டாகும்.

Simmam

simmamகுடும்பத்தில் சிறுசிறு சலசலப்பு ஏற்பட வாய்ப்புண்டு. சமயோதிகமாக சமாளிக்கும் திறன் உண்டாகும். திடீர் செலவுகளால் கடன் வாங்க நேரிடும். தாய் வழியில் எதிர்பார்த்த காரியம் நடைபெறும். உடன் பிறந்தவர்களால் எதிர்பாராத பணவரவு உண்டாகும். குடும்ப உறுப்பினர்களின் தேவையை நிறைவேற்றுவீர்கள். கணவன்– மனைவி இடையே அன்னியோன்யம் உண்டாகும். வைரவர் வழிபாடு மகிழ்ச்சி உண்டாக்கும்.

Kanni

kanniதடைகளை தாண்டி முன்னேறும் நாள். மனதில் தைரியமும் தன்னம்பிக்கையும் அதிகரிக்கும். வாழ்க்கைத்துணையால் மகிழ்ச்சி உண்டாகும். உங்களின் முயற்சிக்கு குடும்ப உறுப்பினர்களால் ஆதரவு உண்டாகும். விற்பனையும் லாபமும் அதிகரிக்கும். பணியாளர்கள் பணிச்சுமை குறையும். உறவினர்களால் சங்கடங்கள் ஏற்பட வாய்ப்புண்டு. மேலதிகாரியுடன் விவாதத்தில் ஈடுபடாதீர்கள். அனுசரித்து நடவுங்கள்.

Thulaam

thulaamஉற்சாகமான நாள். திடீர் செலவுகள் ஏற்பட்டாலும் சமாளிப்பீர்கள். சாதமாக முடிவுகள் வந்து சேரும். குடும்பம் தொடர்பாக முக்கிய முடிவுகளை எடுப்பீர்கள் . சோம்பல் நீங்கி சுறுசுறுப்பு உண்டாகும். அரச காரியங்கள் அனுகூலமாகும். முக்கிய முடிவுகளை எடுக்க சிறந்த நாள். உறவினர்களால் மகிழ்ச்சி உண்டாகும். வெளியிடத்தில் மரியாதை அதிகரிக்கும்.  முருகப்பெருமான் வழிபாடு நன்மைகள் அதிகரிக்கும்.

Viruchchikam

viruchchikam

உத்தியோகத்தில் உயர் அதிகாரிகளால் மரியாதை உண்டாகும். . உங்களைச் சுற்றியிருப்போரில் நல்லவர்கள் யார் என்பதை கண்டறிவீர்கள். புதிய முயற்சிகள் சாதகமாக முடியும். கடன்கள் திரும்பக் கிடைக்கும். எதிரிகளால் ஏற்பட்ட தொல்லைகள் நீங்கும். பழப்புழக்கம் அதிகரிக்கும். மேலதிகாரிகளால் நன்மை உண்டாகும். சமயோசிதமாக பேசி காரியம் சாதிப்பீர்கள். நன்மைகள் அதிகரிக்கும்.

Thanusu

thanusuசுறுசுறுப்புடன் எதையும் முன்னின்று சாதிப்பீர்கள். ஒற்றுமை பிறக்கும். உத்தியோகத்தில் சக ஊழியர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். தாய்வழி ஆதரவு கிடைக்கும். மனதில் உற்சாகம் பிறக்கும். சிலருக்கும் புதிய நண்பர்கள் அறிமுகமாவார்கள். உடல் நலனில் அக்கறை தேவை. காரியங்கள் அனுகூலமாகும். தெய்வ பிரார்த்தனை அதிகரிக்கும். குடும்பத்தில் பக்குவமாக நடந்துகொள்வீர்கள். தன்னம்பிக்கை துளிர்விடும்.

Maharam

magaram

நேர்மறை எண்ணங்கள் தோன்றலாம். திடீரென எதையோ இழந்ததைப் போன்று காணப்படுவீர்கள். எதையும் முழுமையாக நம்பி காரியத்தில் இறங்க வேண்டாம். வழக்கமான பணிகளில் கூடுதல் அக்கறை தேவை. அலைச்சலும் செலவுகளும் உண்டாக வாய்ப்புண்டு. சகோதரர்களால் ஆதாயம் உண்டாகும். வீண் செலவுகளை தவிர்த்தல் நல்லது. சிரமங்கள் குறையும்.

Kumpam

kumbam

எதிர்பாராத பணவரவு கிடைக்கும். கணவன் –மனைவி இடையே மகிழ்ச்சி உண்டாகும். பணியிடத்தில் தவறுகளை சுட்டிக்காட்டுவீர்கள். நண்பர்கள் பலமாக இருப்பார்கள். கடன் பிரச்சினைகள் கட்டுப்பாட்டுக்குள் வரும் பணியிடத்தில் மேலதிகாரிகள் உங்களை முழுமையாக நம்புவார்கள். முயற்சிகள் வெற்றியளிக்கும். மகிழ்ச்சியான செய்தி கிடைக்க வாய்ப்புண்டு. விநாயக வழிபாட்டா நலம் கிடைக்கும்.

Meenam

meenamநண்பர்களின் உதவி கிடைக்கும். வியாபாரத்தில் ஏற்பட்ட இழப்புக்களை சரிசெய்து புது முயற்சியை விதைப்பீர்கள். எதிரிகளால் ஏற்பட்ட தொல்லைகள் நீங்கும். சக பணியாளர்கள் உறுதுணையாக இருப்பார்கள். பணிகளை விரைந்து முடிப்பீர்கள். நல்லது நிறைவேறும்.  ஆதாயம் உண்டாகும். உற்சாகமான நாள். வீண்செலவுகளை தவிர்த்தல் நன்று. உடல் ஆரோக்கியம் மேம்படும். மகிழ்ச்சி கிடைக்கும்.

 

 

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
03 11
சினிமாஜோதிடம்

விஜய் – த்ரிஷா குறித்து பாலிவுட் இயக்குநர் விக்ரம் பட் நெகிழ்ச்சிப் பதிவு: சமூக வலைதளங்களில் வைரல்!

தமிழ் சினிமாவின் முன்னணி நட்சத்திரங்களான விஜய் மற்றும் த்ரிஷா கிருஷ்ணன் ஆகியோரின் தனிப்பட்ட வாழ்க்கை குறித்து...

ILLAYARAJA14
ஜோதிடம்சினிமா

எனக்கு இசை தெரியாது! – பத்மபாணி விருது மேடையில் இளையராஜாவின் தன்னடக்கப் பேச்சு!

மகாராஷ்டிராவில் நடைபெற்ற 11-ஆவது அஜந்தா எல்லோரா சர்வதேச திரைப்பட விழாவில், உலகப்புகழ் பெற்ற இசையமைப்பாளர் இளையராஜாவுக்கு...

horoscope 2026 predictions 1763385900
ஜோதிடம்

2026 திரிகிரக யோகம்: இந்த 3 ராசிகளுக்கு அடித்தது அதிர்ஷ்டம் – குவியப்போகும் செல்வம்!

ஜோதிட சாஸ்திரத்தின்படி, 2026 ஆம் ஆண்டு நிகழவுள்ள ‘திரிகிரக யோகம்’ சில ராசிகளுக்குப் பொற்காலமாக அமையவுள்ளது....

tamilnaadi
ஜோதிடம்

இன்றைய ராசி பலன் 01 டிசம்பர் 2025 : 12 ராசிகளுக்கு வருமானம் உயரும்

இன்று டிசம்பர் 01, கார்த்திகை மாதம் 15, சந்திர பகவான் மீன ராசி ராசியில் ரேவதி...