Untitled 1 63 scaled
இலங்கைசெய்திகள்

யாழ். கொழும்பு ரயில் சேவை மீண்டும் ஆரம்பம்

Share

கொழும்பிலிருந்து யாழ்ப்பாணத்திற்கான தொடருந்து சேவை ஜூலை மாதம் 15 ஆம் திகதி முதல் மீண்டும் ஆரம்பிக்கப்பட உள்ளதாக தொடருந்து திணைக்களம் அறிவித்துள்ளது.

திருத்த வேலை காரணமாக கொழும்பு – யாழ். தொடருந்து சேவை, ஜனவரி 5 ஆம் திகதி முதல் இடைநிறுத்தி வைக்கப்பட்டுள்ள நிலையில் மீண்டும் அடுத்த மாதம் ஆரம்பிக்கப்படவுள்ளது.

மேலும், குறித்த திருத்த வேலைகள் முடிந்த பின்னர் காங்கேசன்துறையில் இருந்து அநுராதபுரத்திற்கு மணிக்கு 100 கிலோமீட்டர் வேகத்தில் தொடருந்துகள் பயணிக்க முடியும் என போக்குவரத்து அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.

வடக்கு தொடருந்து மார்க்கத்தின் அநுராதபுரம் முதல் ஓமந்தை வரையில் முன்னெடுக்கப்பட்டு வருகின்ற திருத்தப்பணிகள் காரணமாக கொழும்பு கோட்டையிலிருந்து காங்கேசன்துறை வரையான நேரடி தொடருந்து சேவை அநுராதபுரம் தொடருந்து நிலையம் வரை மட்டுப்படுத்தப்பட்டிருந்தது.

வடக்கு தொடருந்து மார்க்க திருத்தப் பணிகளுக்கு இந்திய அரசு நிதி உதவி வழங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் எதிர்வரும் 15 ஆம் திகதி வடக்கு தொடருந்து சேவையை மீள ஆரம்பிப்பதற்கு எதிர்பார்த்துள்ளதாக தொடருந்து திணைக்களம் தெரிவித்துள்ளது.

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
k d
இலங்கை

வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ள எச்சரிக்கை.

இலங்கை மக்களுக்கு பலத்த காற்று தொடர்பான எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மத்திய, சப்ரகமுவ, வடமத்திய மற்றும் வடமேல்...

G.L.Peiris
இலங்கை

அனைத்து மக்களும் ஒன்றிணைந்தால் சாத்தியம் என்கிறார் முன்னாள் அமைச்சர் ஜி.எல்.பீரிஸ்

கூட்டு எதிரணியின் அரசியல் பிரமுகர்கள் சர்வமதத் தலைவர்களைச் சந்தித்து கலந்துரையாடி வருகின்றனர், இந்த நிலையில் இது...

dengue
இலங்கை

அதி அபாய மட்டத்தில் டெங்கு – பொதுமக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை.

2026 ஆம் வருடத்தில் இதுவரை பதிவான டெங்கு நோயாளிகளின் எண்ணிக்கை 68,071 ஆக பதிவாகி உள்ளதாக...

money
இலங்கை

அதிரடியாக உயர்த்தப்பட்ட சில கட்டணங்கள்.

  வர்த்தகம், வாணிபம், உணவுப் பாதுகாப்பு மற்றும் கூட்டுறவு அபிவிருத்தி அமைச்சர் வசந்த சமரசிங்க ,...