Untitled 1 25 scaled
இலங்கைசெய்திகள்

மீண்டும் குறைகிறது எரிவாயுவின் விலை!

Share

இலங்கையில் மீண்டும் லிட்ரோ சமையல் எரிவாயுவின் விலை குறைக்கப்படவுள்ளதாக லிட்ரோ நிறுவனத்தின் தலைவர் முதித்த பீரிஸ் அறிவித்துள்ளார்.

அடுத்த மாதம் இந்த விலை குறைப்பு முன்னெடுக்கப்படும் என குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன் இவ்வாறு லிட்ரோ சமையல் எரிவாயு தொடர்ச்சியாக விலை குறைக்கப்படும் நான்காவது சந்தர்ப்பம் இதுவாகும் என சுட்டிக்காட்டியுள்ளார்.

எவ்வாறாயினும் இம்முறை விலை எவ்வளவு குறைக்கப்படும் என்ற விபரத்தை இப்போதே குறிப்பிட முடியாது என்றும் முதித்த பீரிஸ் தெரிவித்துள்ளமை சுட்டிக்காட்டத்தக்கது.

இதேவேளை இம்மாதம் 4ஆம் திகதி லிட்ரோ நிறுவனம் சமையல் எரிவாயு விலைகளை திருத்தியிருந்தது.

இதன்படி, 12.5 கிலோகிராம் நிறையுடைய சமையல் எரிவாயுவின் விலை 452 ரூபாவால் குறைக்கப்பட்டு புதிய விலை 3,186 ரூபா என அறிவிக்கப்பட்டிருந்தது.

இதேவேளை, 5 கிலோகிராம் எரிவாயுவின் விலை 181 ரூபாவால் குறைக்கப்பட்டு புதிய விலை 1,281 ரூபாவாகவும், 2.3 கிலோகிராம் எடையுள்ள எரிவாயுவின் விலை 19 ரூபாவால் குறைக்கப்பட்டு அதன் புதிய விலை 598 ரூபாவாகவும் பேணப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
03 18
செய்திகள்உலகம்

‘சேவ் அமெரிக்கா’ சட்டமூலம்: ஆதரவளிக்காத செனட்டர்களுக்கு டொனால்டு ட்ரம்ப் கடும் எச்சரிக்கை!

அமெரிக்க வரலாற்றிலேயே மிகவும் தீர்மானமிக்க சட்டமூலமாக அமையவுள்ள ‘சேவ் அமெரிக்கா’ (Save America Act) சட்டமூலத்திற்கு...

02 17
செய்திகள்உலகம்

அமெரிக்க தேசிய பயங்கரவாத எதிர்ப்பு மைய பணிப்பாளர் இராஜினாமா: ஈரான் போர் குறித்து ட்ரம்பிற்குப் பகிரங்க எச்சரிக்கை

அமெரிக்க தேசிய பயங்கரவாத எதிர்ப்பு மையத்தின் (NCTC) பணிப்பாளர் பதவியிலிருந்து இராஜினாமா செய்துள்ள ஜோசப் கென்ட்,...

01 17
செய்திகள்விளையாட்டு

சென்னை சூப்பர் கிங்ஸ் முன்னாள் வீரர்களைக் கௌரவிக்கின்றது: ஏ.ஆர். ரஹ்மானின் இசை நிகழ்ச்சியுடன் ஒன்றுகூடல்

இந்தியப் பிரீமியர் லீக் (IPL) 2026 தொடர் ஆரம்பமாகவுள்ள நிலையில், சென்னை சூப்பர் கிங்ஸ் (CSK)...

29 8
செய்திகள்விளையாட்டு

FIFA உலகக் கோப்பை 2026: அமெரிக்கப் போட்டிகளை மெக்சிகோவிற்கு மாற்ற ஈரான் கோரிக்கை!

அமெரிக்கா, மெக்சிகோ மற்றும் கனடா ஆகிய நாடுகளில் இணைந்து நடைபெறவுள்ள 2026-ஆம் ஆண்டுக்கான FIFA உலகக்...