தாய்லாந்துக்கான இலங்கைத் தூதுவர் சமிந்தா ஐ கொலொன்னே தாய்லாந்து நாட்டு பிரதமர் பிரயூத் சான்சாவை இலங்கைக்கு விஜயம் மேற்கொள்ளுமாறு அழைப்பு விடுத்துள்ளார்.
தாய்லாந்தின் தலைநகர் பெங்கொங்கில் தாய்லாந்து பிரதமரை சந்தித்தபோதே இந்த அழைப்பை அவர் விடுத்துள்ளார்.
இதன்போது தாய்லாந்து பிரதமர் கொரோனா ஒழித்தல் , மீன்பிடி, விவசாயம் மற்றும் செயற்கை மழையை பொழியச் செய்தல் போன்ற நடவடிக்கைகளுக்கு தேவையான தொழில்நுட்ப ஒத்துழைப்புகளை வழங்க இணக்கம் தெரிவித்துள்ளார்.
மேலும் தூதுவர் தாய்லாந்தில் சிங்கள மொழியை கற்பிப்பதற்கான மத்திய நிலையத்தை திறப்பது தொடர்பாக முன்வைத்த யோசனைக்கு பிரதமர் தமது இணக்கத்தை தெரிவித்துள்ளார்.
தாய்லாந்து 5 ஆவது பிம்ஸ்டெக் மாநாட்டுக்கு தலைமைத்துவம் வழங்க எதிர்பார்த்துள்ளதால் அதற்காக இலங்கை தமது அதிகபட்ச ஒத்துழைப்பை இலங்கை வழங்குமெனவும் தூதுவர் சமிந்தா ஐ கொலொன்னே தெரிவித்துள்ளார்.
Leave a comment