இலங்கை
பழுதடைந்த உணவு விற்ற உணவகத்திற்கு சுகாதார பரிசோதகரால் வழக்கு தாக்கல்!
பழுதடைந்த உணவு விற்ற உணவகத்திற்கு சுகாதார பரிசோதகரால் வழக்கு தாக்கல்!
யாழ்நகர் ஆஸ்பத்திரி வீதியில் அமைந்துள்ள பிரபல அசைவ உணவகத்தில் சில தினங்களிற்கு முன்னர் பழுதடைந்த உணவினை வழங்கியதாக பொது மக்களால் யாழ் மாநகர சுகாதார வைத்திய அதிகாரி வைத்தியர் பாலமுரளி அவர்களிற்கு முறைப்பாடு வழங்கப்பட்டது.
இதனையடுத்து நேற்றையதினம் 23.05.2023 அன்று வைத்தியர் பாலமுரளி தலைமையில் யாழ்நகர் பொது சுகாதார பரிசோதகர் பா.சஞ்சீவன் மற்றும் பொது சுகாதார பரிசோதகர் குழுவினால் குறித்த கடை திடீர் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டது.
இதன்போது தொழிலாளர் இருவர் மருத்துவ சான்றிதழ் இல்லாமல் இருந்தமை மற்றும் மனித பாவனைக்கு உதவாத கோழி இறைச்சி, றொட்டி, சோறு என 20kg உணவு பொருட்களும் பழுதடைந்த பழங்களும் பொது சுகாதார பரிசோதகர்களால் கைப்பற்றப்பட்டது. இதனை தொடர்ந்து இன்றைய தினமே யாழ்நகர் பொது சுகாதார பரிசோதகர் பா.சஞ்சீவனால் குறித்த உணவக உரிமையாளரிற்கு எதிராக சான்று பொருட்களுடன் வழக்கு தாக்கல் செய்யப்பட்டது.
வழக்கினை விசாரித்த மேலதிக நீதவான் சான்று பொருட்களை அழிக்குமாறு உத்தரவிட்டதுடன், கடை உரிமையாளரை ஒரு இலட்சம் ரூபா சரீர பிணையில் செல்ல அனுமதித்ததுடன், வழக்கினை எதிர்வரும் யூன் மாதம் 15ம் திகதிக்கு ஒத்தி வைத்தார்.
#srilankaNews
You must be logged in to post a comment Login