Gesa4UrkKyrlDhyupX5H
இலங்கைசெய்திகள்பிராந்தியம்

பாடசாலை மாணவியின் உயிரை பறித்த ஜீப்!

Share

பாடசாலை மாணவியின் உயிரை பறித்த ஜீப்!

குருநாகலில் பஸ் நிறுத்தத்தில் காத்திருந்த 17 வயதுடைய பாடசாலை மாணவி ஒருவர் ஜீப் மோதிய நிலையில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.

இந்த விபத்து சம்பவம் நேற்று (20) காலை குருநாகல், உஹுமிய, டி.எஸ். சேனநாயக்க கல்லூரிக்கு முன்பாக இடம்பெற்றுள்ளது.

விபத்தில் குறித்த பாடசாலையில் 11 ஆம் தரத்தில் கல்வி பயிலும் 17 வயதான சித்துமினி ராஜகுரு என்ற மாணவியே உயிரிழந்துள்ளார்.

விபத்து தொடர்பில் தெரியவருவதாவது,

தனியார் வகுப்பில் கலந்துகொள்வதற்காக குருநாகலுக்கு செல்வதற்காக பேருந்திற்காக காத்திருந்த போதே குறித்த மாணவி விபத்துக்குள்ளாகியுள்ளார்.

வீதியில் பயணித்த ஜீப் ஒன்று, சாரதியால் கட்டுப்பாட்டை இழந்த நிலையில், வீதியை விட்டு விலகி, மாணவி மீது பாய்ந்து, தொலைபேசி கம்பத்தில் மோதி நின்றது.

இந்த விபத்து சம்பவம் சாரதி தூங்கியதால் விபத்து ஏற்பட்டிருக்கலாம் என பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.

விபத்து தொடர்பில் ஜீப் வண்டியின் சாரதி கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
Kerala Drugs
இலங்கை

எரித்து அழிக்கப்பட கேரள கஞ்சா.

கடந்த காலங்களில் கடல் மார்க்கமாக கொண்டு வரப்பட்ட கஞ்சா பொதிகள் வெவ்வேறு திகதிகளில் கைப்பற்றப்பட்ட நிலையில்...

question mark
இலங்கை

செல்வந்தர்களுக்கு ஏற்பட்டுள்ள திடீர் நெருக்கடி.

திடீரெனப் பணக்காரர்களாகியுள்ள சந்தேகத்திற்கிடமான நபர்கள் குறித்த தகவல்களை வழங்குமாறு பொது மக்களை காவல்துறையினர் அண்மையில் கோரியிருந்த...

Gotabaya Rajapaksa 24
இலங்கை

கோட்டாபய ராஜபக்சவுக்கு எதிராக வாக்குமூலம் வழங்கிய நெருங்கிய உறவினர்!

கொழும்பு மத்திய குற்றப் புலனாய்வுப் பிரிவினால் கோட்டாபய ராஜபக்ச மற்றும் சுகீஸ்வர பண்டார ஆகியோருக்கு எதிராக...

dengue original 1
இலங்கை

டெங்கு மரணங்களின் எண்ணிக்கை அதிகரிப்பு – பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கையும் உயர்வு.

அண்மையில், தேசிய டெங்கு கட்டுப்பாட்டுப் பிரிவு வெளியிட்டுள்ள அறிக்கையின் பிரகாரம், நாட்டில் பதிவான டெங்கு மரணங்களின்...