download 10 1 8
இலங்கைசெய்திகள்பிராந்தியம்

யாழில் கண்புரை சத்திரசிகிச்சை முகாம்!

Share

யாழில் கண்புரை சத்திரசிகிச்சை முகாம்!

யாழ் மாவட்டத்தில் கண்புரை சத்திரசிகிச்சை தேவைப்படுபவர்களுக்கான அடுத்த கட்ட சத்திரசிகிச்சை முகாம் யாழ் போதனா வைத்தியசாலையில் கண்சத்திரசிகிச்சை நிபுணர் வைத்திய கலாநிதி மலரவனினால் எதிர்வரும் மே 18 ஆம் திகதி வியாழக்கிழமை மேற்கொள்ளப்படவுள்ளது.

இச்சத்திர சிகிச்சைக்காக தெரிவுசெய்யப்பட்டவர்கள் இன்று புதன்கிழமை காலை 09 மணிக்கு கீழ்குறிப்பிடும் வைத்தியசாலைகளுக்கு சமூகந்தருமாறு யாழ்ப்பாணம் பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்திய கலாநிதி ஆ.கேதீஸ்வரன் கேட்டுக்கொண்டுள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், நெடுந்தீவு பிரதேசத்திலிருந்து தெரிவுசெய்யப்பட்டவர்கள் நெடுந்தீவு பிரதேச வைத்தியசாலைக்கும்  நயினாதீவு பிரதேசத்தில் இருந்து சத்திரசிகிச்சைக்காக தெரிவுசெய்யப்பட்டவர்கள் நயினாதீவு பிரதேச வைத்தியசாலைக்கும் அனலைதீவு பிரதேசத்தில் இருந்து சத்திரசிகிச்சைக்காக தெரிவுசெய்யப்பட்டவர்கள் அனலைதீவு பிரதேச வைத்தியசாலைக்கும் எழுவைதீவு  பிரதேசத்தில் இருந்து சத்திரசிகிச்சைக்காக தெரிவுசெய்யப்பட்டவர்கள் எழுவைதீவு ஆரம்ப சுகாதார பராமரிப்பு நிலையத்திற்கும் சமூகந்தருமாறு கேட்டுக்கொள்கின்றேன்.

அங்கிருந்து இவர்களை யாழ் போதனா வைத்தியசாலைக்கு அழைத்துச்செல்ல இலவச போக்குவரத்து வசதிகள் ஒழுங்குபடுத்தப்பட்டுள்ளது.

சத்திரசிகிச்சைக்குப் பின்னர் இவர்களை மீள அந்தந்த வைத்தியசாலைக்கு அழைத்துச் செல்ல ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

தெரிவுசெய்யப்பட்ட நோயாளர்களுக்கு சுகாதாரத் திணைக்களத்தினால் தொலைபேசி மூலம் அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளன.

எனவே தெரிவு செய்யப்பட்ட நோயாளர்களை இன்று காலை 9 மணிக்கு மேற்குறிப்பிட்ட வைத்தியசாலைக்கு உரிய நேரத்தில் சமூகம் தந்து ஒத்துழைப்பு வழங்குமாறு கேட்டுக்கொள்கின்றேன் – என்றுள்ளது.

#srilankaNews

Share

1 Comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
images 1
செய்திகள்இலங்கை

ரயில் பயணிகள் அவதானம்: நவம்பர் மாதப் பருவச் சீட்டின் செல்லுபடி காலம் டிசம்பர் 7 வரை நீடிப்பு!

நாட்டில் நிலவும் சீரற்ற காலநிலை மற்றும் ரயில் போக்குவரத்துப் பாதிப்புகள் காரணமாக, நவம்பர் மாதத்துக்கான ரயில்...

images
செய்திகள்இலங்கை

மீட்புப் பணிகள் நடக்கும் இடங்களில் ட்ரோன்களைப் பறக்க விட வேண்டாம்: இலங்கை விமானப்படை எச்சரிக்கை!

நாட்டில் ஏற்பட்டுள்ள பேரழிவு காரணமாகப் பல பகுதிகளில் மீட்புப் பணிகள் தீவிரமாக இடம்பெற்றுவரும் நிலையில், அப்பகுதிகளில்...

24 6717c3776cee3
செய்திகள்இலங்கை

சீனாவின் பாரிய நிவாரண உதவி: இலங்கைக்காக 1 மில்லியன் அமெரிக்க டாலர்!

நாட்டில் ஏற்பட்டுள்ள பாரிய பேரழிவின் தாக்கத்தில் இருந்து இலங்கை மீள்வதற்காக, சீனா அரசாங்கம் இரண்டு வகைகளில்...

download
செய்திகள்இலங்கை

கண்டி மாவட்டத்தில் விமானம் மூலம் நிவாரணப் பொருட்கள் விநியோகம்: தரைவழியாக அணுக முடியாத பகுதிகளுக்கு உதவி!

கண்டி மாவட்டத்தில் ஏற்பட்ட அனர்த்த நிலைமை காரணமாக தரைவழியாக அணுக முடியாத பகுதிகளில் சிக்கித் தவிக்கும்...