IMG 20230516 WA0011 1 1
இலங்கைசெய்திகள்பிராந்தியம்

ஊர்திப் பவனி ஐந்தாவது நாள் பயணம் வரணியில் நிறைவு !

Share

ஊர்திப் பவனி ஐந்தாவது நாள் பயணம் வரணியில் நிறைவு !

2009 ஆம் ஆண்டு முள்ளிவாய்க்காலில் தமிழினம் கொத்துக் கொத்தாகக் கொன்றழிக்கப்பட்டதை அடையாளப்படுத்தி முள்ளிவாய்க்கால் இனப்படுகொலை நினைவேந்தல் வாரம் ஒவ்வொரு ஆண்டும் மே மாதம் 12 ஆம் திகதி முதல் 18 ஆம் திகதி வரை அனுஷ்டிக்கப்பட்டு வருவதோடு 18 ஆம் திகதி முள்ளிவாய்க்கால் முற்றத்திலே மாபெரும் நினைவேந்தல் நிகழ்வுகளும் இடம்பெறுவது வழக்கம்.

இதன் ஒரு அங்கமாக தாயக நினைவேந்தல் அமைப்பின் ஏற்பாட்டில் தமிழ் இனப்படுகொலைக்கு நீதி கோரியும் இனப்படுகொலையை இளஞ்சந்ததியினருக்கு கொண்டு சேர்க்கும் வகையிலும்  முல்லைத்தீவில் இருந்து முள்ளிவாய்க்கால் தமிழ் இனப்படுகொலை  நினைவு படங்கள் தாங்கிய ஊர்திப் பவனியானது கடந்த 12 ம் திகதி தொடங்கப்பட்டது.

முல்லைத்தீவு மாவட்டத்தில் இறுதி யுத்த காலப் பகுதியில் கடுமையான ஷெல் தாக்குதல்கள் மற்றும் விமானத் தாக்குதல் உள்ளிட்ட பல்வேறு தாக்குதல்களால் பெரும் எண்ணிக்கையில் மக்கள் கொல்லப்பட்ட கப்பலடிப் பகுதியிலிருந்து   தொடங்கிய இந்த ஊர்திப் பவனியானது வவுனியா சென்று  மன்னார் சென்று அங்கிருந்து வெள்ளாங்குளம்  ஊடாக மல்லாவி நகரை அடைந்து மாங்குளம் கிளிநொச்சி பூநகரி சாவகச்சேரி ஊடாக யாழ்ப்பாணத்தை வந்தடைந்தது

இந்நிலையில் ஊர்தியின் ஐந்தாவது நாள் பயணம் இன்று காலை கொக்குவில் பகுதியில் ஆரம்பமானது அதனை தொடர்ந்து மருதனார்மடம் பகுதியில் மக்கள் அஞ்சலிக்காக  நிறுத்தப்பட்டது அங்கு அதிகளவான மக்கள் அஞ்சலி செலுத்தியிருந்தனர்

அதனை தொடந்து குறித்த ஊர்தி 1995 ம் ஆண்டு இலங்கை அரசின் விமான குண்டுவீச்சு தாக்குதல் காரணமாக அதிகளவான உறவுகள் கொல்லப்பட்ட நவாலி சென்பீற்றேஸ் தேவாலயத்தில் அஞ்சலி செலுத்தி  யாழ்ப்பாணம் நகரின்  உள்ள உலகத் தமிழாராட்சி மாநாட்டு படுகொலை நினைவேந்தல் தூபிக்கு சென்று அஞ்சலி செலுத்தி அதனை தொடர்ந்து தியாகதீபம் திலீபன் அவர்களது நினைவுத் தூபியில் அஞ்சலி செலுத்தி அதன் பின்னர் அச்சுவேலி  வல்வெட்டித்துறை பருத்தித்துறை நகர் பகுதிகளில் மக்கள் அஞ்சலக்காக நிறுத்தப்பட்டு அதனை தொடர்ந்து பருத்தித்துறை முனையில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வில் கலந்து கொண்டு இறுதியாக வரணி பகுதியில் ஐந்தாவது நாள் பயணம் நிறைவடைந்தது

இதேவேளை குறித்த ஊர்திப்பவனியை நேற்றைய நாள் முழுவதும்  புலனாய்வாளர்கள் சிலர் பின்தொடர்ந்து  வந்ததோடு ஊர்தி செல்லும் இடங்களில் அதிகளவான புலனாய்வாளர்கள் வருகை தந்து புகைப்படங்கள் எடுத்ததோடு  கண்காணிப்பு நடவடிக்கைகளையும் முன்னெடுத்தனர்
#srilankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

Recent Posts

தொடர்புடையது
articles2FDa64TGfTKDPmX85aOKjK
உலகம்செய்திகள்

நைஜீரியாவில் கடத்தப்பட்ட மாணவர்கள்: அவர்களை விடுவிக்கப் பாப்பரசர் லியோ உருக்கமான வேண்டுகோள்!

நைஜீரியாவில் ஆயுதக் குழுக்களால் கடத்தப்பட்ட மாணவர்களை உடனடியாக விடுவிக்குமாறு பாப்பரசர் லியோ (Pope Leo) உருக்கமான...

24 66ce10fe42b0d
செய்திகள்இலங்கை

தமிழர்களுக்கு எதிராக வன்முறையைத் தூண்டும் வகையில் பேசிய அம்பிட்டிய சுமணரத்ன தேரரை கைது செய்ய நீதிமன்றம் உத்தரவு!

‘வடக்கில் உள்ள தமிழ் மக்களை தெற்கில் உள்ள மக்களே வெட்டிக் கொல்ல வேண்டும்’ என்று பொதுவெளியில்...

25 6925a9a6dc131
அரசியல்இலங்கைசெய்திகள்

நாடாளுமன்ற பெண் ஊழியர் மீதான பாலியல் அத்துமீறல் புகார்: ஓய்வுபெற்ற நீதிபதியின் அறிக்கையில் முக்கிய முடிவு!

நாடாளுமன்ற பெண் ஊழியர் ஒருவர் மீது பாலியல் அத்துமீறல் ஏதேனும் செய்யப்பட்டுள்ளதா என்பதை விசாரித்து அறிக்கை...