சினிமா
பீட்டர்பால் கணவன் இல்லை வனிதாவின் பதிவால் குழப்பம்!
பீட்டர்பால் கணவன் இல்லை வனிதாவின் பதிவால் குழப்பம்!
தமிழ் திரையுலகின் முன்னணி நடிகையாக வலம் வந்த வனிதா விஜயகுமார், விஜய்யுடன் சந்திரலேகா படத்தில் நடித்ததன் மூலம் அனைவராலும் அறியப்பட்டார்.
அதன்பின்னர் பல படங்களில் நடித்திருந்த வனிதா, பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பலரின் கவனத்தை ஈர்த்தார்.
இவர் நடிகர் விஜயகுமாரின் மகளும், நடிகர் அருண் விஜய்யின் அக்காவும் ஆவார். வனிதா விஜயகுமார் இவர் கடந்த ஆண்டு பீட்டர் பால் என்பவரை மூன்றாவது திருமணம் செய்து கொண்டார்.
தன்னை முறையாக விவாகரத்து செய்துக் கொள்ளாமல் வனிதாவை, பீட்டர் பால் திருமணம் செய்து கொண்டதாக கூறி பீட்டர் பாலின் மனைவி புகார் அளித்திருந்தார்.
இதனை தொடர்ந்து சில நாட்களிலே வனிதாவும் பீட்டர் பாலும் பிரிந்தனர். கடந்த சில தினங்களுக்கு முன்பு வனிதா விஜயகுமாரின் முன்னாள் கணவர் பீட்டர் பால் உடல்நலகுறைவால் காலமானார்.
இவரது திடீர் மரணம் பலரையும் அதிர்ச்சியடைய செய்தது. மேலும் பத்திரிக்கைகளிலும், ஊடகங்களிலும் வனிதாவின் 3-வது கணவர் என்று குறிப்பிட்டு செய்திகள் வெளியிட்டனர்.
வனிதா விஜயகுமார் பதிவு இந்நிலையில் வனிதா விஜயகுமார், நான் மறைந்த பீட்டர் பாலை சட்டப்படி திருமணம் செய்யவில்லை என்றும் நான் அவரது மனைவி இல்லை, அவர் என் கணவர் இல்லை என்றும் சமூக வலைத்தளத்தில் பதிவிட்டுள்ளார்.
#cinema
You must be logged in to post a comment Login