download 5 1 17
இலங்கைசெய்திகள்பிராந்தியம்

சேவையில் ஈடுபட்ட அரச பேருந்தின் மீது கல்வீச்சு!

Share

வடக்கு, கிழக்கு தழுவிய தாயக பிரதேசத்தில் அனைத்து வர்த்தக நிர்வாக சேவைகளை முடக்கி முழுமையான ஹர்த்தாலுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ள நிலையில் முல்லைத்தீவு மாவட்டத்திலும் பூரண ஹர்த்தால் அனுஷ்டிக்கப்பட்டு வரும் நிலையில் முல்லைத்தீவு மாவட்டத்தில் இருந்து அரச பேருந்துக்கள் சேவையில் ஈடுபட்டுள்ளன.

முல்லைத்தீவு மாவட்ட சாலைக்கு சொந்தமான அரச பேருந்து ஒன்று இன்று அதிகாலை 5.30 மணியளவில் முல்லைத்தீவில் இருந்து யாழ்ப்பாணம் சென்று கொண்டிருந்த போது இன்று அதிகாலை செல்வபுரம் பகுதியில் கல்வீச்சு தாக்குதலுக்கு இலக்காகியுள்ளது.

உந்துருளியில் வந்த இருவர் பேருந்து மீது கல்வீசி தாக்குதல் மேற்கொண்டுள்ளார்கள் இதன்போது பேருந்தின் முன்  கண்ணாடி சேதமடைந்துள்ளதுடன் சாரதியும் பாதிக்கப்பட்டுள்ளார்.

சம்பவம் தொடர்பில் முல்லைத்தீவு பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவுசெய்யப்பட்டுள்ளதை தொடர்ந்து முல்லைத்தீவு சாலையில் இருந்து செல்லும் அனைத்து அரச பேருந்துக்களுக்கும் பொலிஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது.

#srilankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
world 231
செய்திகள்உலகம்

ஹோர்முஸ் நீரிணையை இனி மூடப்போவதில்லை: ஈரானின் உறுதிமொழியை அறிவித்தார் டொனால்ட் டிரம்ப்!

சர்வதேச எரிசக்தி விநியோகத்தின் உயிர்நாடியாக விளங்கும் ஹோர்முஸ் நீரிணையை (Strait of Hormuz) இனிவரும் காலங்களில்...

world 230
செய்திகள்இலங்கைபிராந்தியம்

நாய்கள் அச்சப்படுவதாகக் கூறி பட்டாசு கொளுத்த வேண்டாமெனக் கேட்ட பெண் மீது தாக்குதல்: ஒருவர் கைது!

மொரகஹஹேன பகுதியில் பட்டாசு கொளுத்துவதை நிறுத்துமாறு கோரிய பெண் ஒருவர் மீது, அவரது அண்டை வீட்டார்...

world 229
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பெட்ரோல் வாகனங்களுக்கு மீண்டும் QR முறை: தற்காலிக சலுகை இன்று நள்ளிரவுடன் நிறைவு!

சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு பண்டிகைக் காலத்தை முன்னிட்டு பெட்ரோல் வாகனங்களுக்கு வழங்கப்பட்டிருந்த தற்காலிக கியூ.ஆர்...

world 228
செய்திகள்உலகம்

ரஷ்ய எண்ணெய் மீதான தடை விலக்கை மேலும் ஒரு மாதம் நீடித்தது அமெரிக்கா!

சர்வதேச எரிசக்தி சந்தையில் நிலவும் கடும் விலை ஏற்றம் மற்றும் விநியோகத் தட்டுப்பாடுகளைக் கருத்திற்கொண்டு, ரஷ்யாவின்...