bb6XSQ47KzCheaUz01d4
உலகம்செய்திகள்

நடுவானில் தீப்பற்றி எரிந்த விமானம்!

Share

அமெரிக்கன் ஏர்லைன்ஸ் விமானமான போயிங் 737 விமானம் நடுவானில் சென்றுகொண்டிருந்த போது திடீரென தீப்பற்றியுள்ளது. இதனால் விமானம் உடனடியாக தரை இறக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.

கொலம்பஸ்சில் இருந்து பீனிக்ஸ் நகருக்கு  விமானம் பயணம் செய்து கொண்டிருந்த போது பறவை ஒன்று விமானத்தின் இறக்கையில் மோதியுள்ளது.

இதனால் விமானத்தின் என்ஜின் இருக்கும் பகுதியின் ஒருபுறத்தில் இருந்து புகை வெளிவந்து சிறிது நேரத்தில் தீ பிடிக்க தொடங்கியுள்ளது.

இதையடுத்து உடனடியாக விமானம் தரை இறக்கப்பட்டுள்ளது.

இவ்விபத்து சம்பவத்தின் போது விமானத்தில்  173 பயணிகள் மற்றும் பணியாளர்கள் இருந்துள்ளனர்.

விபத்தில் அதிர்ஷ்டவசமாக யாருக்கும் காயங்கள் எதுவும் ஏற்படவில்லை. பின்னர் விமானத்தில் இருந்த பயணிகள் அனைவரும் இறக்கி மற்றொரு விமானத்தில் அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.

#world

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
world 170
செய்திகள்இலங்கைபிராந்தியம்

கடந்த கால தவறுகளில் இருந்து பாடம் கற்று முன்னோக்கிச் செல்வோம்: நாமல் ராஜபக்ச அழைப்பு!

சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டை முன்னிட்டு தங்காலை, கால்டன் ஹவுஸில் இன்று (ஏப்ரல் 15) நடைபெற்ற...

world 169
செய்திகள்இலங்கைபிராந்தியம்

57.5 கிலோ இறந்த கோழி இறைச்சி மீட்பு – வர்த்தகருக்கு எதிராக வழக்கு!

மட்டக்களப்பு, களுவாஞ்சிகுடி பகுதியில் சித்திரைப் புத்தாண்டு காலப்பகுதியில் பொதுமக்களின் சுகாதாரத்தைப் பாதுகாக்கும் நோக்கில் முன்னெடுக்கப்பட்ட விசேட...

world 168
செய்திகள்உலகம்

அமெரிக்காவில் இறக்குமதியாளர்களுக்கு வரிப்பணம் மீளளிப்பு: புதிய நடைமுறை திங்கட்கிழமை ஆரம்பம்!

அமெரிக்க நிறுவனங்கள் மற்றும் இறக்குமதியாளர்களிடமிருந்து சர்வதேச அவசரகால பொருளாதார அதிகாரச் சட்டத்தின் (IEEPA) கீழ் வசூலிக்கப்பட்ட...

world 167
செய்திகள்உலகம்

ஈரான் மீதான கடற்படை முற்றுகை: டொனால்ட் ட்ரம்பிற்கு அதிகரிக்கும் சர்வதேச அழுத்தங்கள்!

ஈரான் மீதான அமெரிக்காவின் கடற்படை முற்றுகை மற்றும் ‘அதிகபட்ச அழுத்தம்’ கொடுக்கும் கொள்கையினால், அமெரிக்க ஜனாதிபதி...