3fEzXQDVW1GMR2tJCpsE
இலங்கைசெய்திகள்பிராந்தியம்

விபத்தில் சிக்கி பல்கலைக்கழக மாணவி உயிாிழப்பு!

Share

களுத்துறை – மத்துகம வீதியில் கல் அஸ்ஹேன் பிரசேத்தில் இடம்பெற்ற விபத்தில் சிக்கி உயிரிழந்த யுவதி தொடர்பில் மேலும் சில தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்த விபத்தில் களுத்துறை, சேறுபிட்ட வெந்தேசிவத்தையை வசிப்பிடமாகக் கொண்ட கந்தமுல்லைச் சேர்ந்த உதேனி நிமேஷா கருணாதிலக்க என்ற 23 வயதுடைய யுவதியே உயிரிழந்துள்ளார்.

உயிரிழந்த பெண் கொழும்பில் உள்ள தனியார் பல்கலைக்கழகம் ஒன்றில் விஞ்ஞான பிரிவில் பயிலும் இறுதியாண்டு மாணவியென விசாரணையில் தெரியவந்துள்ளதாக  களுத்துறை தெற்கு பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

இவருக்கு எதிர்வரும் 28 ஆம் திகதி திருமணம் நடத்த ஏற்பாடு செய்யப்பட்ட நிலையில் தான் திருமணம் செய்யவிருந்த இளைஞனுடன் களுத்துறையில் இருந்து மத்துகம நோக்கி மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்த போது களுத்துறையிலிருந்து சென்ற லொறியுடன் மோதி இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

குறித்த விபத்தில் யுவதி உயிரிழந்துள்ளதாகவும், இளைஞன் ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருவதாகவும் வைத்தியசாலை பேச்சாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

சம்பவம் தொடர்பில் லொறியின் சாரதி கைது செய்யப்பட்டுள்ளதாகவும், சாரதிக்கு ஏற்பட்ட நித்திரை களக்கத்தினால் விபத்து ஏற்பட்டுள்ளதாகவும் விசாரணை அதிகாரி ஒருவர் குறிப்பிட்டுள்ளார்.

#srilankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
22 4
செய்திகள்இலங்கைபிராந்தியம்

யாழ்ப்பாணத்திலிருந்து காணாமல் போன இரு மீனவர்கள் தமிழ்நாடு கடலோரப் பகுதியில் மீட்பு!

யாழ்ப்பாணம் காங்கேசன்துறை ஊரணி கடற்பகுதியில் கடந்த வெள்ளிக்கிழமை மீன்பிடிக்கச் சென்ற நிலையில் காணாமல் போன இரண்டு...

21 4
செய்திகள்அரசியல்இலங்கை

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் வழக்கு: சுரேஷ் சலே மூன்றாவது சந்தேகநபராகப் பெயரிடப்பட்டார்!

அரச புலனாய்வுச் சேவையின் (SIS) முன்னாள் பிரதானியும், ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரலுமான சுரேஷ் சலே, உயிர்த்த...

20 3
செய்திகள்உலகம்

அஸர்பைஜான் மீது ஈரான் ட்ரோன் தாக்குதல்: விமான நிலையம் மற்றும் பாடசாலை இலக்கு!

மத்திய கிழக்கில் நிலவும் போர் பதற்றம் அண்டை நாடுகளுக்கும் பரவி வரும் நிலையில், அஸர்பைஜானின் கட்டுப்பாட்டில்...

19 2
செய்திகள்இலங்கைபிராந்தியம்

போலி உறுதிப்பத்திரம் தயாரித்த பெண் சட்டத்தரணிக்கு 12 ஆண்டு சிறை: கொழும்பு மேல் நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு!

கொழும்பு பொரளைப் பகுதியில் உள்ள பெறுமதியான காணியொன்றுக்குப் போலி உறுதிப்பத்திரங்களைத் தயாரித்ததாகக் குற்றம் சாட்டப்பட்ட பெண்...