download 2 1 17
இலங்கைசெய்திகள்

பிறப்புச்சான்றிதழ் இல்லாதவர்களுக்கும் தேசிய அடையாள அட்டை!

Share

இலங்கையில் பிறப்புச்சான்றிதழ் இல்லாதவர்களுக்கும் தேசிய அடையாள அட்டை வழங்கப்படவுள்ளது.

பிறப்புச் சான்றிதழ்கள் இல்லாத காரணத்தால் தேசிய அடையாள அட்டைகளைப் பெற முடியாத 40 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு தேசிய அடையாள அட்டை வழங்கும் வேலைத்திட்டம் தயாரிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இத்தகவலை ஆட்பதிவு ஆணையாளர் நாயகம் பிரதீப் சபுதந்திரி தெரிவித்தார்.

வாக்காளர் பதிவேட்டில் பதிவு செய்யப்பட்ட கிராம உத்தியோகத்தர் பிரிவில் நிரந்தர வதிவிடத்துடன், பிறப்புச் சான்றிதழ் இல்லாத காரணத்தினால் தேசிய அடையாள அட்டை பெறாத 40 வயதுக்கு மேற்பட்ட இலங்கை பிரஜைகள் இதற்கு விண்ணப்பிக்கலாம் என்றும் சபுதந்திரி தெரிவித்தார்.

இது தொடர்பான மேலதிக தகவல்களை பிரதேச செயலக அலுவலகங்களுடன் இணைக்கப்பட்டுள்ள ஆட்பதிவு திணைக்களத்தின் அபிவிருத்தி உத்தியோகத்தர்களிடம் பெற்றுக்கொள்ள முடியும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

#srilankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
kalani
இலங்கை

களனி கங்கையில் சிறிய வெள்ள அபாயம்.

நீர்ப்பாசன திணைக்களம் விடுத்துள்ள அறிவித்தலின் பிரகாரம், களனி கங்கை ஆற்றுப்படுகையின் மேல் மற்றும் மத்திய நீரேந்து...

Maithripala Sirisena
இலங்கை

உச்சக்கட்ட மகிழ்ச்சியில் மைத்திரி – ஹேமசிறி பெர்னாண்டோ நீதிமன்றில் தெரிவிப்பு.

நேற்று, 2019 உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் தொடர்பான வழக்கில் முன்னாள் பொலிஸ் மா அதிபர் பூஜித்...

சிறைக்கு அழைத்து செல்லப்பட்ட
இலங்கை

சிறைக்கு அழைத்து செல்லப்பட்ட பூஜித் ஜயசுந்தர மற்றும் முன்னாள் ஹேமசிறி பெர்னாண்டோ.

உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல் நடத்தப்படவுள்ளதாக புலனாய்வு தகவல்கள் கிடைத்திருந்தபோதிலும், அதனைத் தடுப்பதற்கு நடவடிக்கை எடுக்காமை,...

Shooting 5
இலங்கை

சற்றுமுன் மிரிஸ்ஸ பகுதியில் துப்பாக்கிசூடு.

இன்றைய தினம், மிரிஸ்ஸ, சந்திப் பகுதியில் மோட்டார் சைக்கிளில் வந்த இனந்தெரியாத இருவரால் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிச்...