download 1 17
இலங்கைசெய்திகள்பிராந்தியம்

கைதடியில் கோர விபத்து!

Share

யாழ்ப்பாணம் கைதடிப் பகுதியில் இடம்பெற்ற வீதி விபத்தில்  உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் சம்பவ இடத்தில் உயிரிழந்துள்ளார்.

இந்த விபத்து இன்றிரவு 9.30 மணியளவில் இடம்பெற்றதாக சாவகச்சேரி பொலிஸார் தெரிவித்தனர்.

கொடிகாமம் பொலிஸ் நிலைய போக்குவரத்து பிரிவு உதவிப்  பொலிஸ் அத்தியட்சகரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

யாழ்ப்பாணத்திலிருந்து கொழும்பு நோக்கிப் பயணித்த இலங்கை போக்குவரத்துச் சபைக்கு சொந்தமான பேருந்தின்  பின்னால் மோட்டார் சைக்கிளில் வந்த உதவிப் பொலிஸ்  அத்தியட்சகர் மோதுண்டு வீதியில் வீழ்ந்துள்ளார். இதன்போது முன்னால் வந்த பாரவூர்தி அவரை மோதித்தள்ளியுள்ளது.

உயிரிழந்தவர் உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் குருணாகலையைச் சேர்ந்த 54 வயதுடைய ஆர்.எம்.குணரத்ன என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த விபத்து தொடர்பாக பேருந்தின் சாரதி மற்றும் பாரவூர்தியின் சாரதி இருவரும் கைது செய்யப்பட்டுள்ளதுடன், சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை சாவகச்சேரி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

#srilankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
world 231
செய்திகள்உலகம்

ஹோர்முஸ் நீரிணையை இனி மூடப்போவதில்லை: ஈரானின் உறுதிமொழியை அறிவித்தார் டொனால்ட் டிரம்ப்!

சர்வதேச எரிசக்தி விநியோகத்தின் உயிர்நாடியாக விளங்கும் ஹோர்முஸ் நீரிணையை (Strait of Hormuz) இனிவரும் காலங்களில்...

world 230
செய்திகள்இலங்கைபிராந்தியம்

நாய்கள் அச்சப்படுவதாகக் கூறி பட்டாசு கொளுத்த வேண்டாமெனக் கேட்ட பெண் மீது தாக்குதல்: ஒருவர் கைது!

மொரகஹஹேன பகுதியில் பட்டாசு கொளுத்துவதை நிறுத்துமாறு கோரிய பெண் ஒருவர் மீது, அவரது அண்டை வீட்டார்...

world 229
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பெட்ரோல் வாகனங்களுக்கு மீண்டும் QR முறை: தற்காலிக சலுகை இன்று நள்ளிரவுடன் நிறைவு!

சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு பண்டிகைக் காலத்தை முன்னிட்டு பெட்ரோல் வாகனங்களுக்கு வழங்கப்பட்டிருந்த தற்காலிக கியூ.ஆர்...

world 228
செய்திகள்உலகம்

ரஷ்ய எண்ணெய் மீதான தடை விலக்கை மேலும் ஒரு மாதம் நீடித்தது அமெரிக்கா!

சர்வதேச எரிசக்தி சந்தையில் நிலவும் கடும் விலை ஏற்றம் மற்றும் விநியோகத் தட்டுப்பாடுகளைக் கருத்திற்கொண்டு, ரஷ்யாவின்...